ARTICLE AD BOX

இந்தியாவில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த செலவில் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயில் பயணத்திலும் ஆபத்து உள்ளது. ரயிலில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தால் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்று பலரும் யோசிப்பார்கள். ரயிலில் ஏறும்போது அல்லது பயணத்தின் போது விபத்து ஏற்பட்டால் பயணி அல்லது அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த இழப்பீடு அனைத்து பயணிகளுக்கும் வழங்கப்படாது. குறிப்பாக ரயிலில் ஏறும்போது அல்லது பயணத்தின் போது விபத்து நேர்ந்தால் இந்த இழப்பீடு ஐஆர்சிடிசி பயணக் காப்பீட்டின் கீழ் வழங்கப்படுகின்றது. ரயிலில் பயணிக்கும் போது சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படும். அப்படியான சூழலில் வெறும் 45 பைசாவை மட்டும் நீங்கள் செலவழித்தால் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும். ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது பயணக் காப்பீட்டை தேர்வு செய்த பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் இந்த காப்பீடு வசதியை தேர்வு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இந்த வசதியின் கீழ் பலன் கிடைக்காது.
இறப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அதுவே பகுதி ஊனம் அடைந்தால் 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். கடுமையான காயம் ஏற்பட்டால் இரண்டு லட்சம் ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.