ARTICLE AD BOX
ரயிலில் 17 வயசு பையன் என்மேல கை வச்சிட்டான்.. 2 முறை பாலியல் தொல்லை.. ஸ்டார் பட நடிகை ஷாக் பேட்டி!
சென்னை: அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தின் மூலம் 2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி போஹங்கரை கோலிவுட் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர் இந்தி வெப்தொடர்களில் அவர் நடித்த ஷீ மற்றும் ஆஷ்ரம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கவின் நடித்த ஸ்டார் படத்தின் மூலம் கடந்த ஆண்டு மீண்டும் கோலிவுட்டுக்கு வந்திருந்தார் அதிதி போஹங்கர்.
சினிமா நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் குறித்தும் சிறு வயதில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் வெளிப்படையாக பேட்டியளித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். நடிகை குஷ்புவுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து அவர் பேசியதை கேட்டு அதிர்ச்சியடையாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அப்படியொரு கொடுமையை சிறு வயதில் அவர் அனுபவித்துள்ளார்.

அந்த வரிசையில், கவினின் ஸ்டார் படத்தில் நடித்த நடிகை அதிதி போஹங்கருக்கும் சிறு வயதில் சில பாலியல் ரீதியான தொல்லைகள் நடந்ததை Hauterrfly எனும் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
ஸ்டார் பட நடிகை: 30 வயதாகும் மராத்தி பட நடிகையான அதிதி போஹங்கர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அதிதி போஹங்கர் நடித்திருந்தனர். ஓடம் இளவரசு இயக்கிய அந்த படம் ஓடவில்லை. கடந்த ஆண்டு இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி 24 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றிப் படமாக மாறிய ஸ்டார் படத்தில் ஜிமிக்கியாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார் அதிதி போஹங்கர்.
அம்மாவுக்கு நடந்தது: CAICWA டீச்சராக அம்மா இருந்த நிலையில், சிறு வயதில் அவருடன் பேருந்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது பயணி ஒருவர் தனது ஜிப்பை கழட்டி ஆபாசமான வேலையை பார்க்க, உடனடியாக என் அம்மா எழுந்து நின்று அங்கிருந்தவர்கள் முன்பாக அந்த நபர் பற்றி சொன்னதும், அவன் அவசரத்தில், எழுந்து நிற்க அவனுடைய பேன்ட் கழண்டு விட்டது. அவசரத்தில், பேருந்தில் இருந்து கீழே குதித்து ஓட இன்னொரு வண்டியில் போய் முட்டிக் கொண்டு கீழே விழுந்தான் என சிறு வயதில் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து பேசிய அதிதி போஹங்கர் வயதுக்கு வந்த பெண்ணாக தான் மும்பையில் வேலைக்கு தேடிக் கொண்டிருக்கும் போது நடந்த மோசமான கசப்பான அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
17 வயசு பையன் மேலே கைவச்சிட்டான்: மும்பையில் ரயிலில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் சென்று கொண்டிருந்தேன். அதில், 18 வயது நிரம்பாத பள்ளி மாணவர்களும் பயணம் செய்யலாம் என்கிற முறை நிலவியது. ஒரு முறை 17 வயது மதிக்கத்தக்க இளம் மாணவன் திடீரென எனது மார்பை பிடித்து அழுத்திவிட்டான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே இடியே மேல் இறங்கியது போல இருந்தது. ஷாக்காகி ஒரே கத்தாக கத்திவிட்டேன். ஆனால், அங்கிருந்தவர்கள் யாருமே அதை கண்டுகொள்ளவில்லை. நான் சும்மா விடல, ரயில்வே போலீசாரிடம் இதுதொடர்பாக புகார் கொடுத்தேன்.
போலீஸ் கண்டுக்கல: ஆனால், அவர்கள் அலட்சியமாக பெருசா ஒன்றும் ஆகவில்லை தானே என்றும் அந்த பையனை நான் எங்கே போய் கண்டு பிடிக்கிறது. அவன் உன் மீது கை வைத்தான் என்பதற்கு என்ன ஆதாரம் என ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு அலட்சியப்படுத்தினர். அதன் பின்னர், ரயிலில் இருந்த பெண் போலீஸ் முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த அவர் அந்த விவகாரத்தில் எனக்கு உதவினார். ஆனால், எனக்கு இருந்த பெரிய பயமே அந்த சின்ன பையன் புத்தி ஏன் அப்படி கெட்டுப்போய் கிடக்குது என்பதில் தான் இருந்தது என்றார்.

ஆபாச காட்சிகளில் நடித்த அனுபவம்: ஷீ வெப்சீரிஸில் கான்ஸ்டபிள் பூமியாக நடித்த அதிதி போஹங்கர் நாயக் எனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனை பிடிக்க அண்டர்கவர் ரெட் லைட் ஏரியா கேர்ளாக மாறி நடித்திருப்பார். தமன்னாவின் காதலர் விஜய் வர்மா மற்றும் நாயக்காக நடித்த ஆடுகளம் கிஷோர் என அனைவரிடமும் படு ஆபாசமான காட்சிகளில் அசால்ட்டாக நடித்திருப்பார் அதிதி போஹங்கர். பாபி தியோலின் ஆஷ்ரம் வெப்சீரிஸிலும் இவருக்கு உச்சகட்ட ஆபாசமான காட்சிகள் அதிகளவில் உள்ளன.
இன்டிமேசி ஆபீசர் யாருமில்லை: ஹாலிவுட் படங்களில் நடிகைகள் நிர்வாணமாகவும் உடலுறவு காட்சிகளில் நடிக்கும் போது இன்டிமேசி ஆபிசர் அல்லது இன்டிமேசி போலீஸ் என ஒருவர் இருப்பார். தவறான விதத்தில் நடிகைகளை யாரும் பலாத்காரம் செய்துவிடக் கூடாது என்றும் எல்லை மீறி போய்விடக் கூடாது என்றும் அவர்கள் கட்டுப்படுத்துவர். ஆனால், ஷீ மற்றும் ஆஷ்ரம் வெப்சீரிஸ்களில் நடிக்கும் போது அதுபோல யாராவது இருந்தார்களா? என்கிற கேள்விக்கு அப்படியெல்லாம் யாருமே இல்லை. அனைத்தையும் இயக்குநர்கள் தான் சரியாக கவனித்துக் கொண்டனர் என்றார்.
நடிகர்களுக்குத்தான் பயம்: ஆபாசமான காட்சிகளில் நடிக்கும் போது நடிகைகளை விட அதிகம் பயப்படுவது நடிகர்கள் தான். ரொம்பவே பயந்து பயந்து தான் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கின்றனர். ஷீ வெப்சீரிஸில் நான் நடிப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்த ஒரு பையனுக்கு உதறலே எடுத்து ஓடியே போய்விட்டான் என்றும் அதிதி போஹங்கர் ஓபனாக பேசியுள்ளார்.
மணிரத்னம், வெற்றிமாறன் இயக்கத்தில்: அமீர்கானின் தங்கல் படத்தில் மகளாக நடிக்கும் வாய்ப்பு மிஸ்ஸானது வருத்தம் தான் என்றாலும் அதன் பின்னர், எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறேன். இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட ஜாம்பவான்களின் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். கூடிய சீக்கிரமே வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் முயற்சித்து வருகிறேன் என அதிதி போஹங்கர் தனது பேட்டியில் தனக்கு சிறு வயதில் நடந்த பாலியல் தொல்லையில் ஆரம்பித்து பல விஷயங்களை ஸ்டார் படத்தின் ஜிமிக்கி போல பட்டு பட்டென வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது.