ARTICLE AD BOX

சென்னை,
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'பாகுபலி'. இதில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார்.
இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை மக்களிடையே பெற்று ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியானது. இந்த இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்று இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றன.
இந்த நிலையில், பாகுபலி முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை ரீ-ரிலீஸ் செய்யுமாறு ரசிகர்கள் படக்குழுவிடம் இணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு படக்குழு இந்தாண்டு ரீ-ரிலீஸ் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நடிகர் பிரபாஸ் பிறந்த நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

�