ARTICLE AD BOX
ரம்யா பாண்டியனின் கால் அழகை பார்த்தீர்களா.. தலைவி மீண்டும் ஆரம்பிச்சுட்டாங்க!
சென்னை: ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் ரம்யா பாண்டியன். அதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்தார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்துவார். ரம்யா பாண்டியன் என்றதும் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது மொட்டை மாடி போட்டோ ஸூட் தான். அதை தொடர்ந்து தற்போது அதே ஃபார்முக்கு மீண்டும் ரம்யா பாண்டியன் வந்துள்ளதாக வலைதளங்களில் நெட்டிசன்கள் கதைக்க தொடங்கி விட்டனர்.
தமிழில் எதிர்பாராத வெற்றி கிடைக்காவிட்டாலும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ரம்யா பாண்டியன் நடித்து வந்தார். பின்னர், ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராகவும் வலம் வந்தார் ரம்யா பாண்டியன். இந்த நேரத்தில் மம்மூட்டியுடன் நண்கல் நேரத்து மயக்கத்தில் நடித்தார். இப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து மம்மூட்டியே வியந்து பாராட்டினார். அவர் பாராட்டியதே எனக்கு ஊக்கம் அளிப்பதாகவும் அவரே தெரிவித்தார்.

மொட்டை மாடி போட்டோ ஸூட்: நடிகைகளுக்கு பட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதே போட்டோஸூட் தான். ஆனால், பலரும் விதவிதமான லொகேஷனை தேர்ந்தெடுத்து அதற்கேற்ற லைட்ஸ்களை செட் செய்து போட்டோ ஸூட் நடத்துவார்கள். ஆனால், ரம்யா பாண்டியன் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஸூட் எடுத்து வலைதளத்தில் வெளியிட்டார். அந்த நாளில் இருந்தே திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். மிகவும் பிரபலம் அடைய அதுவும் முக்கிய காரணமாக இருந்தது. அவர் எந்த பக்கம் சென்றாலும் அந்த மொட்டை மாடி போட்டோ ஸூட் பற்றிய பேச்சுக்களும், கமாண்ட்களும் வராமல் இருப்பதில்லை.
பிக்பாஸ்: பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சிரித்தப்படியே சக ஹவுஸ்மேட்டுகளை விமர்சித்தார். அதனாலேயே மோசமான விமர்சனங்களையும் பெற்றார். குறிப்பாக ஆரியை அட்டாக் செய்து பேசியது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயரை பெற்று தந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், கோயில், ஊர்களை சுற்றி வலம் வந்தார். அவர் செல்லும் ஊர்களில் படம் பிடித்து அதன் அழகியலை வர்ணித்து புகைப்படங்களை பதிவிடுவார். இதனால், ரசிகர்களும் நீங்க நல்லா ஊர் சுத்துறிங்க எப்போ திருமணம் என்ற பேச்சும் அடிபட்டது.

திருமணம்: அவரது தங்கை கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை திருமணம் செய்த பின்னர், சிலரது கவனம் இவர் பக்கம் திரும்பியது. எப்போது திருமணம் என்ற கேள்வியை கேட்காமல் சிலர் ரியாக்சன்கள் வெளிப்பட்டன. ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். வட இந்தியர் என்றது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் ஏற்பட்டது. தமிழ் அழகியை வட இந்தியர் திருமணம் செய்துவிட்டார் என்ற ஏக்கத்தில் இப்படி பண்ணிட்டாரே என்று நெட்டிசன்கள் புலம்பினர்.
மீண்டும் போட்டோ ஷூட்: திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஏற்கனவே மொட்டை மாடியில் நின்று தொப்புள் தெரிய சேலையில் போட்டோ ஷூட் நடத்தினார் ரம்யா பாண்டியன். அதையும் தாண்டி இது ரசிக்கும் படி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். இளையராஜா பாடல் ஓளிக்க அவரது புகைப்படங்கள் அழகாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமாண்டில் தெரிவித்தனர். அழகி என்றும் புகழ தொடங்கிவிட்டனர்.