அட்லி கொடுத்த மெகா வெற்றி!. அந்த இயக்குனருடன் கூட்டணி போடும் ஷாருக்கான்!...

10 hours ago
ARTICLE AD BOX

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஷாருக்கான். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 90களில் இவரின் படங்களில் டப் செய்யப்படாமல் அப்படியே தமிழகத்தில் வெளியாகி நல்ல வசூலை பெறும். பெரும்பாலும் காதல் படங்களில்தான் அதிகம் நடிப்பார். ஷாருக்கான் படம் என்றாலே ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உண்டு.

அதேபோல், ஷாருக்கான் படத்தில் காதல் பாடல்கள் இனிமையாக இருக்கும் என்பதற்காகவே ரசிகர்கள் படம் பார்ப்பார்கள். அவர் படம் தொடர்பான பாடல் கேசட்டுகள் தமிழகத்தில் அதிக அளவில் விற்பனை ஆகும். கமலுடன் ஹே ராம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் சம்பளம் வாங்காமலே நடித்தார் ஷாருக்கான்.

தமிழ் சினிமா இயக்குனர்களை எப்போதும் கவனித்து வரும் நடிகர் இவர். மணிரத்னம் இயக்கத்தில் உயிரே படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் எவர்கிரீன் ஹிட். விஜயை வைத்து 3 படங்களை இயக்கிய அட்லியை அழைத்து ஜவான் படத்தை தயாரித்து நடித்தார். இந்த படம் 1300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.

எனவே, தென்னிந்திய இயக்குனர்களின் மீது ஷாருக்கானின் பார்வை திரும்பியிருக்கிறது. அல்லு அர்ஜூனை வைத்து புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களை இயக்கிய சுகுமாரின் இயக்கத்தில் நடிக்கும் ஆசை ஷாருக்கானுக்கு வந்திருக்கிறது. ஏனெனில் புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் 1700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.


புஷ்பா 2-வுக்கு பின்னர் ராம் சரணை வைத்து ஒரு படமெடுக்கும் வேலையில் சுகுமார் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் ஷாருக்கான் உள்ளே புகுந்திருக்கிறார். தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுகுமார் யாரை வைத்து படமெடுக்க போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.

அல்லது, ராம் சரண் படத்தை முடித்துவிட்டு கூட அவர் ஷாருக்கான் படத்தை இயக்கவும் வாய்ப்புண்டு. இந்த படத்திற்கு பின் புஷ்பா 3 எடுக்கவும் திட்டமும் சுகுமாருக்கு இருக்கிறது. எனவே, தொடர் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

Read Entire Article