ARTICLE AD BOX
ரத்னா மீது விழுந்த கள்ளக்காதல் பழி.. சௌந்தரபாண்டியின் சதி.. அண்ணா சீரியல்!
சென்னை: சண்முகம், பரணியை மெரிக்கவிற்கு போகக்கூடாது என்று சொன்னதால், பரணி என்னை யாரும் தடுக்க முடியாது, நான் கண்டிப்பா அமெரிக்கா போவேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள். இதையடுத்து வீட்டுக்கு வரும் பாக்கியம், நீ அமெரிக்காவுக்கு எல்லாம் போய் படிக்க வேண்டாம் உன்னை மெட்ராசுக்கு அனுப்பி படிக்க வச்சது நான் தான். இப்போ நானே சொல்றேன், நீ ஒழுங்கா புருஷன் ஓட வாழ்ந்து ஒரு வாரிசை பெற்று கொடு இப்போதைக்கு அது போதும். இங்க பாக்குறேன் வேலையையே பாரு என்று சொல்கிறாள்.
ஆனாலும் பரணி யார் சொன்னாலும் சரி நான் அமெரிக்கா போகத்தான் போறேன் என தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். அடுத்த நாள் காலையில் ரத்னா அவசரமாக ஸ்கூலுக்கு போகணும் என்னை டிராப் பண்ணிடு என்று சொல்ல சண்முகம் முத்துப்பாண்டியுடன் போக சொல்ல ரத்னா, நீங்க பரணியை கூட்டிட்டு போங்க நான் அண்ணனோட போறேன் என சண்முகத்துடன் கிளம்பி செல்கிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல் : இன்றைய எபிசோடில், ஷண்முகத்துடன் வந்த ரத்னா வழியில் வண்டியை நிறுத்தி பரணியை ஏன் அமெரிக்கா அனுப்ப மாட்டுற? என்று பேச ஷண்முகம் எனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்துடீங்களா? உங்களை படிக்க வச்ச எனக்கு அவளுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா? என்று கோபப்படுகிறான். அந்த நேரம், உடன்குடியிடம் இருந்து போன் கால் வர, சண்முகம் நீ ஆட்டோல ஸ்கூலுக்கு போய்ட்டு, நான் ஆட்டோ ஸ்டாண்டில் உன்னை விட்டு விடுறேன் என்று சொல்ல ரத்னா ஒன்னும் வேண்டாம், எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு நடந்து போக தெரியும் என சொல்கிறாள்.
கள்ளக்காதல்: இந்த நேரம் பார்த்து அறிவழகன் இந்த வழியாக வர சண்முகம், டேய் வெள்ளக்கோட்டான் ரத்னாவை ஸ்கூலில் டிராப் பண்ணிடு என்று சொல்ல ரத்னா அவன் கூட போக மாட்டேன் என்று சொல்ல, அறிவழகன், ஏங்க நான் என்ன பண்ணேன், என்னிடம் மட்டும் ஏன் அடிக்கடி இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க, நானும் ஸ்கூலுக்கு தானே போறேன் வாங்க போகலாம் என்று சொல்லி அழைக்க, ரத்னா சரி என வண்டியில் ஏறி செல்கிறான். இதை பார்த்த வெங்கடேஷ், கோபமாகிறான், உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று அரிவாள் சாணம் பிடிக்கும் இடத்தில போய் நிற்கிறான்.
சௌந்தரபாண்டியின் சதி: வெங்கடேசனைப் பார்த்த சௌந்தரபாண்டி, ரத்னா உன்கூட சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அறிவழகனுக்கும் ரத்னாவிற்கும் கள்ளக்காதல் என்று இந்த நம்பவை, அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி இந்த ஊர் தப்பா பேசணும்.. அந்த நேரம் பார்த்து, நீ வந்து, என் மனைவி ரத்னா அப்படி பட்டவள் இல்லை, அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும் என்று சொல்லி அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும். இதுமட்டும் நடந்தா, அந்த ரத்னா காலம் முழுக்க அவ உன் காலடியில் கிடப்பா. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று ஐடியா கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.