ARTICLE AD BOX
Pradeep Ranganathan: நடிகர்கள் கயாடு லோஹர் மற்றும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் புரொமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு இவர்கள் பேட்டி அளித்தனர்.
சிக்கிய கயாடு லோஹர்
அந்த பேட்டியின் போது, பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் முக்கிய தீமான மொபைல் போன்களை பறிமாரிக் கொள்ளும் டாஸ்க் அளிக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் போது, கயாடு லோஹரும் பிரதீப் ரங்கநாதனும் மொபைல்களைப் பரிமாறிக்கொண்டனர். அப்போது, பிரதீப் தான் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக கயாடு லோஹர் சிக்கிக் கொண்டார்.
பிரதீப் கயாடுவின் ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தபோது, அவளுடைய மொபைலில் ஒரு 'வேறு ஆப்' இருப்பதைக் கண்டுபிடித்து அது பற்றி பேசினார். அப்போது, சுதாரித்துக் கொண்ட கயாடு லோஹர், அதற்குள் செல்ல வேண்டாம் எனத் தடுத்தார். அப்போது பிரதீப், அது ஒரு மீம் உருவாக்கும் ஆப் என்று கூறினார்.
கேலி செய்த பிரதீப், அஸ்வத்
அதிர்ச்சியடைந்த, கயாடு சிரித்துக் கொண்டே பிரதீப்பை 'அங்கே போக வேண்டாம்' என்று சொல்லி மொபைலை வாங்க வந்தார். ஆனால் பிரதீப் விடாமல் அந்த ஆப்பிற்குள் சென்று பார்த்தார். அப்போது, "கயாடு லோஹர் தெலுங்கு சினிமாவின் உச்சியில் இருக்கும் நடிகை" என்று மீம் கிரியேட் செய்திருப்பதை படித்து சிரித்தார்.
மேலும், உங்களுக்கு நீங்களே மீம் கிரியேட் செய்து வெளியிடுகிறீர்களா எனவும் கிண்டல் செய்தார். இதை எல்லாம் கேட்ட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து “அவள் தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக்கொண்டு தெலுங்கு சினிமாவின் அடுத்த டாப் ஹீரோயின் எனப் போடுகிறாள்” என்று அங்கிருப்பவர்களுக்கு விளக்கினார். இதனால், அங்கு பேச கயாடு வெட்கப்பட மீம்ஸ்களை உருவாக்கி சோசியல் மீடியா பக்கங்களுக்கு அனுப்பியதற்காக கயாடுவை கேலி செய்து கொண்டிருந்தார்.
இது பிஆர்
பின், அதனை ஒப்புக் கொண்ட கயாடு, “அது PR என்று அழைக்கப்படுகிறது. எனக்காக யாரும் செய்யவில்லை என்றால் என்ன, அதை நானே செய்து கொள்கிறேன். மற்றவர்கள் எனக்காக மீம் கிரியேட் செய்யும் வரை நான் அதை செய்யப் போகிறேன் அவ்வளவு தான் எனக் கூறினார்,
இன்னும் 2 மாதம் தான்
பின்னர் வீடியோவில், அஸ்வத் அதைப் பற்றி மீண்டும் கருத்துத் தெரிவித்து, “ஒரு பெண் தனக்கென மீம்ஸ்களை உருவாக்குவது இது ஒரு மாதிரி இருக்காதா? ”என்று கூறினார். அந்த நேரத்தில் குறுக்கிட்ட பிரதீப், கயாடு அவள் அவளுடைய மகிழ்ச்சிக்காக “அவற்றை உருவாக்கிப் பார்ப்பது” பிடிக்கும் போல என்று கூறினார் நிலைமையை சரிசெய்தார். அத்தோடு, இன்னும் “இரண்டு மாதங்களில், உனக்கென ரசிகர் பக்கங்கள் இருக்கும்,” என்று பிரதீப் கயாடுவிடம் கூறினார், மேலும் அவளுக்காகவும் ஒரு ரசிகர் பக்கத்தைத் தொடங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
நெட்டிசன்கள் விமர்சனம்
கயாடுவின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகத் தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் அவரை ஆதரித்து பேசினர். எக்ஸ் தள பக்கத்தில் (முன்னர் ட்விட்டர்) கருத்து தெரிவித்த ஒருவர், “ டிராகன் படத்தில் கயாடுவை பார்த்த பின் நிச்சயமாக... சந்தேகமே இல்லாமல் எல்லாமே மாறும்.” எனக் கூறியிருந்தார். மற்றொரு ரசிகர் “கயாடு உண்மையைப் பேசுகிறாள்.” என ஆதரவு தெரிவித்தார்.
மேலும் படிக்க: டிராகன் படம் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்
மற்றும் ஒருவர் பிரதீப் ஏன் அந்த ஆப்பை சொல்ல வேண்டும். அவர் அதைப் புறக்கணித்திருக்கலாம். ஆப்பை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினார். அதே சமயத்தில் மற்றொருவர் இன்னும் எத்தனை பிரபலங்கள் இதைச் செய்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.
டிராகன் படம்
பிப்ரவரி 21 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான டிராகன், பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. இதில் அனுபமா பரமேஸ்வரன் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துடன் மோதியது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்