ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் '5' காய்கறிகள்!! சுகர் நோயாளிகள் கட்டாயம் சாப்பிடனும்

6 hours ago
ARTICLE AD BOX

Vegetables For Diabetes : சர்க்கரை நோயாளிகளுக்கு வரப் பிரசங்கமாக இருக்கும் சில காய்கறிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே குறைக்கும் '5' காய்கறிகள்!! சுகர் நோயாளிகள் கட்டாயம் சாப்பிடனும்

இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் மாறி வரும் வாழ்க்கை முறையால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரத்த சர்க்கரை அதிகரிப்பின் காரணமாக உடலில் பல பாகங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால்தான் சர்க்கரை நோயை அமைதியான கொலையாளி என்று சொல்லப்படுகிறது. இந்நோய் காரணமாக கண், சிறுநீரகம் கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இருப்பினும் சில உணவுப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாம். இத்தகைய சூழ்நிலையில், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் எந்த காய்கறிகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

கேரட்

நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் உள்ளன. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் கூட சாப்பிடலாம் வேக வைத்தும் கூட சாப்பிடலாம். மேலும் இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவே உள்ளது.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, போலிக் அமிலம், நார்ச்சத்து  மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் இன்சுலின் திறனை மேம்படுத்தும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் நிச்சயமாக உங்களது உணவில் வெண்டைக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ரோக்கோலி

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் நிச்சயமாக உங்களது உணவில் பிரக்கோலி சேர்த்துக் கொள்ளுங்கள். இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், கால்சியம், மெக்னீசியம், செலினியம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. முக்கியமாக இதிலிருக்கும் சல்போராபேன் சர்க்கரை நோயாளிகளின் ரத்த நாளங்கள் சேதம் ஏற்படுவதை தடுக்க உதவும் பிரக்கோளியில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவே உள்ளது. எனவே இதை நீங்கள் காய்கறியாக அல்லது சூப்பராக கூட சாப்பிடலாம்.

இதையும் படிங்க:  ரத்த சர்க்கரை அதிகரிப்பு...கை, கால்களில் இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உடனே கவனிங்க

பச்சை இலை காய்கறிகள்

vபச்சை இலை காய்கறிகள் சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தவிர இதில் கலோரிகள் ரொம்பவே குறைவாக உள்ளது. இதன் வழக்கமான நுகர்வானது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக பச்சை இலை காய்கறிகள் சாப்பிட வேண்டும்.  இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே நீங்கள் விரும்பினால் கீரையை காய்கறி சூப் அல்லது சாலட் வடிவில் சாப்பிடலாம்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகள் பிளாக் காபி குடித்தால் நல்லதா? கெட்டதா?

 

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளன. இது உடலுக்கு தேவையான தண்ணீரை வழங்கும். ஆராய்ச்சி படி, வெள்ளரிக்காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் வெள்ளரிக்காய் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் இதை சாலட் அல்லது காய்கறிகளின் சேர்த்து சாப்பிடுங்கள்.

Read Entire Article