ARTICLE AD BOX
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் வலி அதிகமாக இருக்கிறது என்று பலர் நிறைய மாத்திரைகள் சாப்பிடுவது உண்டு. ஆனால் வலியை குணமாக்க மருத்துவர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
லவங்கப்பட்டை மாதவிடாய் வலியை போக்குவதில் முக்கிய பங்காற்றுவதாக மருத்துவர் ஜெயரூபா கூறுகிறார். அப்படியாக அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த லவங்கப்பட்டையை பற்றி பார்ப்போம்.
மாதவிடாய் வலி: கர்ப்பப்பையைச் சுற்றிய தசைகளை இயற்கையாக ரிலாக்ஸ் செய்து, மாதவிடாய் வலியை குறைக்கும்.
கருத்தரித்தல்: கருத்தரிக்க முயற்சி செய்பவர்களுக்கு உதவும், ஆரோக்கியமான கருமுட்டைகள் உருவாக உதவுகிறது.
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்: இரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்.
உடல் எடையை குறைக்கும்: மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பை குறைத்திடும்.
செரிமானத்தை மேம்படுத்தும்: ஜீரண உறுப்புகளின் செயல்பாட்டை சீராக்கிடும்.
உடல் டீடாக்ஸ் ஆகும்: உடலிலிருக்கும் நச்சுக்களை நீக்கி இயற்கையாக சுத்தமாக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடென்ட் செறிவு அதிகம்: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமான தோற்றத்திற்கும் உதவும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: கொழுப்பு கட்டுகளை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
நினைவாற்றல் & மன நலம் மேம்படும்: மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
சுறுசுறுப்பான உடல் & நீண்ட ஆயுள்: செல் பழுதுபார்க்கும் தன்மை கொண்டது, இதனால் உடல் வலுவாக இருக்கும்.
இலவங்கப்பட்டை தேநீர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
2 இலவங்கப்பட்டை துண்டுகள்
150 மி.லி தண்ணீர்
½ எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இலவங்கப்பட்டையை போட்டு கொதிக்க விடவும்.
5-7 நிமிடங்கள் கொதித்ததும், அடுப்பை அணைத்து அரை எலுமிச்சை சாறு பிழியவும். தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
இலவங்கப்பட்டை தேநீரீன் 10 மெய் சிலிர்க்கும் நன்மைகள்!
சர்க்கரை நோயாளிகள் தேனை தவிர்க்கலாம். காலை டீ, காபிக்குப் பதிலாக இந்த தேநீர் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.