ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், காமெடி எழுத்தாளராகவும் முத்திரை பதித்தவர் தான் கிரேஸி மோகன். இவர் திரைப்படம் வசனம் எழுதிய பெரும்பாலான படங்களில், நாயகிகளின் பெயர் ஜானகி என்று தான் இருக்கும், இதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு காரணம் என்ன?
நாடக நடிகர் மற்றும் எழுத்தாளராக இருந்த கிரேஸி மோகனை திரைப்படத்திற்கு அழைத்து வந்தவர் கே.பாலச்சந்தர். 1983-ம் ஆண்டு தான் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற படத்தை, கிரேஸி மோகன் எழுதிய ட்ரமாவான மேரேஸ் மேட் இன் சலூன் என்ற கதையின் அடிப்படையில் இயக்கினார். இந்த படத்தில் கவிஞர் வாலி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, விஜி, ராமகிருஷ்ணா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தனர்.
அதன்பிறகு கமல்ஹாசன் நடித்த, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன், சந்திரன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா, காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், மன்மதன் அம்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு, திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். இந்த படங்கள் அனைத்துமே கமல்ஹாசனுக்கு காமெடியில் பெயர் சொல்லும் படமாக இன்றும் நிலைத்திருக்கிறது. கமல் மட்டுமல்லாமல், ரஜினிக்கு அருணாச்சலம் உட்பட மற்ற நடிகர்களின் படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
காமெடி காட்சிக்கு பெயர் பெற்ற கிரேஸி மோகன் தான் திரைக்கதை வசனம் எழுதிய அனைத்து படங்களிலும் நாயகியின் பெயர் ஜானகி என்று தான் வைத்திருப்பார். அதேபோல், நாயகியின் பெயர் ஜானகி என்று வைத்தால் தான் நான் எழுதுவேன் என்று அடம் பிடித்து அந்த பெயரை வைத்திருக்கிறார். உதாரணத்திற்கு, தெனாலி பூவெல்லாம் கேட்டுப்பார் ஆகிய படங்களில், ஜோதிகா, அவ்வை சண்முகி படத்தில் மீனா, பொய்க்கால் குதிரை விஜி, அபூர்வ சகோதரர்கள் கௌதமி உள்ளிடட பல படங்களில் நாயகிகளின் பெயர் ஜானகி தான்.
இந்த அளவிற்கு தான் எழுதும் பெரும்பாலான படங்களுக்கு நாயகியின் பெயர் ஜானகி என்று வைக்க காரணம் என்ன தெரியுமா, சின்ன வயதில் கிரேஸி மோகன் பள்ளியில் அதிகமாக சேட்டை செய்வாராம். அனைத்து ஆசிரியர்களும் அவரை திட்டி அவர் கண்டித்துள்ளனர். ஆனால் 4-வது படிக்கும்போது ஜானகி என்ற ஆசிரியர் மட்டும் தான் அவரை பாராட்டி அவர் அவரது குறும்புத்தனத்தை ரசித்துள்ளார். அந்த ஆசிரியருக்கு பெருமை சேர்க்கும் விதமாகத்தான் தான் திரைக்கதை வசனம் எழுதும் படங்களில் நாயகிகளுக்கு ஜானகி என்று பெயர் வைத்துள்ளார் கிரேஸி மோகன் என்று கவிதா ஜகவர் என்பவர் கூறியுள்ளார்.