ARTICLE AD BOX
ரஜினிகாந்த்தின் 45ஆவது திருமண நாள்.. அவரது ரசிகர்கள் என்ன செஞ்சிருக்காங்க பாருங்க
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற சூழலில்;அடுத்ததாக அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஜெயிலர் 2 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். அடுத்ததாக மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 45ஆவது திருமண நாளை கொண்டாடிவருகிறார்.
ரஜினிகாந்த் இந்த வயதிலும் பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இய்க்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. உலக அளவில் 700 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதன் காரணமாக மிகப்பெரிய உற்சாகத்தோடு காணப்படுகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினிகாந்த்தின் குடும்பம்: ரஜின்காந்த் லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக ரஜினியை பேட்டி எடுக்க லதா சென்றபோது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பிறகு காதலாக மாறியது. இருவருக்கும் திருப்பதியில் வைத்துதான் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. முக்கியமாக லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதேபோல் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் முதலில் கோச்சடையான் படத்தை இயக்கினார். அதனையடுத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார்.
அட வேற லெவல் ஆட்டமா இருக்கே ப்பா.. மகனுடன் செம ஆட்டம் போட்ட பிரபுதேவா
விவாகரத்து: இதற்கிடையே தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென அவரை விவாகரத்து செய்தார். இரண்டாவது மகள் சௌந்தர்யாவும் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விரைவில் முதல் மகளான ஐஸ்வர்யாவுக்கும் இரண்டாவது திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண நாள்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் இன்று தனது 45ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் செயலாளர் தலைமையில் ரசிகர்கள் பலர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள். அப்போது அவர்கள் ரஜினி, லதா ஆகியோரின் புகைப்படங்கள் உடைய பதாகைகளை கையில் வைத்திருந்தார்கள். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.