ARTICLE AD BOX

Atlee: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ தன்னுடைய அடுத்த படத்தில் வாங்க இருக்கும் சம்பளம் குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தினை இயக்கியவர் அட்லீ. இப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் மெளனராகம் படத்தை அப்பட்டமாக காப்பி அடித்தது போல இருந்ததாக ரசிகர்கள் கலாய்த்து இருந்தனர்.
இதை தொடர்ந்து, அட்லீ தொடர்ச்சியாக தளபதி விஜயின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தாலும் கூட இது பழைய படங்களில் அப்பட்டமான காப்பி என்றே ரசிகர்கள் தொடர்ச்சியாக அட்லீயை கலாய்த்தனர்.

இருந்தும் அட்லீக்கு பாலிவுட் வாய்ப்பு குவிந்தது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது.
இருந்தும் அட்லீ தமிழ் படங்களை காப்பி அடித்தே ஜவானாக எடுத்து இருப்பதாகவும் ரசிகர்களிடம் விமர்சனம் எழுந்தது. இருந்தும் அட்லீக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. தற்போது அட்லீயின் 6வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்தது.
முதலில் சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தினை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு படத்தினை தான் அட்லீ இயக்க போகிறாராம். மிகப்பெரிய இரண்டு நிறுவனங்கள் தயாரிக்க இருக்கிறதாம்.
அல்லு அர்ஜூனுக்கு 250 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கும் நிலையில் அட்லீக்கு 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அட்லீ தான் இந்திய இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக உயருவார்.