ARTICLE AD BOX
ரஜினி மாதிரி ஒருத்தர பார்த்ததே இல்லை... தனுஷ் காம்பினேஷன் வேணாம்.. லிங்குசாமி ஓபன் டாக்!
சென்னை: இயக்குநர் லிங்குசாமி தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் கமலை வைத்து உத்தம வில்லன் படத்தை தயாரித்திருந்தார். அப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் தோல்வியால் பெரும் நஷ்டத்திற்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தள்ளப்பட்டது. இந்நிலையில், உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்ததாக லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதைவிட இயக்குநர் யார் என்று தெரிந்தால் அசந்து போவிங்க.
இயக்குநர் விக்மரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து பின்பு ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் லிங்குசாமி. ரன்,பையா சண்டக்கோழி, அஞ்சான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்துள்ளார். கோலிசோடா, ரஜினிமுருகன், கும்கி, பையா, வழக்கு எண்18/9, உத்தம வில்லன் ஆகிய படங்களை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினி ரசிகன்: சமீபத்தில் லிங்குசாமி அளிக்கும் பேட்டிகளில் ரஜினி, விஜய் குறித்து சுவாரஸ்யமாக பேசி வருகிறார்.அதுகுறித்த வீடியோக்களை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். குறிப்பாக லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகன் என்று அவரே தெரிவித்திருக்கிறார். பில்லா படம் பார்த்து சில்லறையை தெறிக்க விட்டிருக்கேன் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி குறித்து பேசினால் லிங்குசாமி கண் கலங்குவதை பார்க்கலாம். அந்தளவுக்கு ரஜினி மீது அவருக்கு தனிப்பட்ட அன்பு இருக்கிறது.
ஏதாவது செய்யணுமா: சமீபத்தில் லிங்குசாமி அளித்த பேட்டியில், நான் சிறைக்கு செல்வதாக வந்த செய்தியை கேட்டு உடனே போன் செய்த ரஜினி சார் நான் ஏதாவது செய்யணுமா, தற்போது நிலவரம் என்ன எவ்வளவு கொடுக்க வேண்டும் சொல்லு முடித்துவிடலாம் என்று ரஜினி கேட்டார். இது போன்ற ஒரு மனசு இருப்பதால் தான் இன்றும் சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கிறார் எனவும் லிங்குசாமி தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம்: அதேபோன்று உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினி சாரை நேரில் சந்தித்து அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தோம். லிங்கா படம் தோல்வி அடைந்த நேரத்தில் தனஷ் - ரஜினி காம்பினேஷனில் ஒரு படம் எடுக்கலாம் என்றும் இப்படத்தை ஆர்.முருகதாஸ் படம் இயக்குவதாக முடிவு பண்ணியாச்சு. ஆனால், ரஜினி அப்பவும் ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்னார், தனுஷ் காம்பினேஷன் வேண்டாம் நாம நேரடியா தனியாவே களம் இறங்குவோம் என்றது எனக்கு செம ஹேப்பி. ஏ.ஆர்.முருகதாஸ் வர சொல்லி கதை ரெடி பண்ண சொன்னா என்கிட்ட இப்ப கதை இல்லை என சொல்றான் என லிங்குசாமி தெரிவிக்கிறார்.
தோல்வி: இருவரும் பாம்குரோவ் வருவதற்கு முன்பே ஏதாவது ஒரு லைனை புடி ரஜினி சார் ஓகே சொல்லிட்டார் என்று ஏ.ஆர்.முருகதாஸிடம் நான் சொன்னேன். ஆனால், உத்தம வில்லன் தோல்வியால் இப்படம் ட்ராப் ஆனது. ரஜினி சார் மாதிரி கதை யாரும் சொல்ல முடியாது. செம சூப்பரா சொல்வாரு.நான் பக்கத்துல இருந்து அவரை பார்த்து ரசித்து கேட்டிருக்கேன். நம்மலை அவர் கவனிப்பாரு நாம சொல்றது புடிச்சுருக்கா, சும்மா சொல்றாங்களா எல்லாத்தையும் நோட் பண்ணிட்டு அவருக்கு நம்பிக்கை வந்தா தான் அவரு நம்மகூட நெருங்கி பழகுவார் என லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஜினி சார் இன்னும் என் மீது அதே அன்போடு பழகி வருவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தான் என்றார்.