ARTICLE AD BOX

அஜித் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி .விடாமுயற்சி படத்திற்கு பிறகு குட் பேட் அக்லி படம் ரிலீஸாவதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். நேற்று இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு ஃபேன் பாயாக ஆதிக் அஜித்தை படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு குட் பேட் அக்லி பட டீஸரை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது இதோ: டீசர் வெளியானதில் இருந்து பயங்கர ஹைப் கொடுக்கிறீர்கள் என ஆதிக்கிடம் கேட்டனர். இது தேவையில்லாத வேலை. இதே மாதிரி ஹைப் கொடுத்து அந்த படங்களின் நிலைமை கடைசியில் என்ன ஆனது என அனைவருமே அறிந்திருப்பார்கள் என ஆதிக்கிடம் கேட்டபோது நான் டைரக்டர் கிடையாது. நான் அஜித்தின் ஒரு தீவிர ரசிகன். போஸ்டர் ஓட்டினேன். கட்டவுட் கட்டினேன். பாலபிஷேகம் பண்ணினேன். தியேட்டரில் உட்கார்ந்து பேப்பர்களை கிழித்து போட்டேன். அப்படிப்பட்ட ஒருத்தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.
அப்போ அது எப்படிப்பட்ட சம்பவமாக இருக்கும் என கூறினார். அஜித் அந்த டீசரின் முடிவில் உங்க எல்லோரையும் மிஸ் பண்ணி விட்டேன் என கூறியிருப்பார். அதற்கு காரணம் இவ்வளவு காலம் நான் உங்களை மிஸ் பண்ணி விட்டேன் என்பதை இப்போதுதான் அஜீத் நினைத்திருக்கிறார். ஏனெனில் இவ்வளவு நாளுக்கு பிறகு கமர்சியலில் இருந்து வெளியே வந்துவிட்டார். இதில் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவெனில் ஒருவர் எனக்கு மன்றம் வேண்டாம் .ரசிகர்கள் வேண்டாம், ஏகே என கூப்பிடு, அஜித் என கூப்பிடு என சொன்னாலும் நாங்கள் உங்களை கொண்டாடிக் கொண்டுதான் இருப்போம் என ரசிகர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கிறார்கள் ,
அதை நிரூபித்தும் இருக்கிறார்கள். அதனால் இதைப் பார்த்தாலே ஆட்டோமேட்டிக்கா ஒரு மனிதனுக்கே தோன்றும். அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று. இப்படித்தான் அஜித்தும் இந்த படத்தில் தர லோக்கலாக இறங்கி செய்வோம் என செய்து இருக்கிறார். இன்னொரு விஷயம் ஆதிக் அஜித்திடம் ஆரம்பத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மட்டும்தான் சொன்னாராம். அதுவும் நேர்கொண்ட பார்வை படத்தின் போது அஜித்திடம் ஒன்லைன் சொல்லாமல் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மட்டும்தான் சொல்லியிருக்கிறார்.
அதற்கு அஜித் ஷாக் ஆகிவிட்டாராம். அதிலிருந்து தான் இந்த படத்தின் கதையே ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இந்த டீசரில் பார்க்கும்பொழுது அஜித்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் உற்று நோக்கினால் தெரியும். வில்லனிசம் பண்ணும் போது அஜித்திற்கு இருக்கும் மாஸ் பெரிய அளவில் இருக்கிறது. அதுக்கு என தனி ஃபேன்ஸ் இருந்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் மங்காத்தா படத்திலேயே அதை நாம் பார்த்தோம். அந்த படத்தை ஏன் அனைவரும் கொண்டாடினார்கள் என்றால் இந்த அளவுக்கு ஒரு மாஸ் ஹீரோ வில்லனாக பண்ண முடியாது என்பதை நிரூபித்தார் அஜித் .
சரி அதற்கு முன்னாடி யார் வில்லன் எனப் பார்த்தால் வாலி படத்தில் ஒரு கேரக்டர். இந்த இரண்டுமே பெரிய கிளாசிக்காக பார்த்தார்கள். அதையும் கொண்டுவந்து இந்த படத்தில் வைத்து டோட்டலா ஒரு வில்லனை பார்த்த மாதிரி இருந்தது. மோசமான வில்லன் அஜித் என்பதைப் போல இந்த படத்தில் காட்டி இருக்கிறார். டீசரை பார்க்கும்போது குட் என யாரையும் பார்க்க முடியவில்லை.

எல்லாருமே பேட் அக்லியாகத்தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி அதில் வருகிற டயலாக் தான் ரசிக்கும்படியாக இருந்தது. அந்த மாதிரி டயலாக் எல்லாம் பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக எவ்வளவு நாள் தான் நல்லவனாகவே இருக்கிறது என அவர் சொல்லும்போது வேறலெவல். அதனால் படமும் தெறிக்க விடும் என செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.