ARTICLE AD BOX
ரஜினி, கமல் பட காமெடி நடிகை பிந்து கோஷ் மரணம்... அதிர்ச்சியில் உறைந்த சினிமா பிரபலங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் 80களில் கோவை சரளா, மனோரமா ஆகியோரை போன்று காமெடியில் கலக்கியவர் தான் பிந்துகோஷ். 100 படங்களுக்கும் நடித்திருக்கும் இவர் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வறுமை: பிபி சுகர் மட்டுமல்லாமல் ஹார்ட் ஆபரேஷன் கூட செய்து இருக்கிறார். தற்போது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கூட இவர் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். 80களில் காமெடியில் கலக்கிய பிந்துகோஷ் கார், சொந்த வீடு என சகல வசதியுடன் தான் வாழ்ந்து வந்துள்ளார். பட வாய்ப்புகள் குறைய வாழ்வில் வறுமை ஒட்டிக்கொண்டது. வறுமையின் காரணமாக சொத்துக்களை விற்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு இவர் கஷ்டப்பட்டு வருகிறார். தற்போது ஒரு பேட்டியில் தனது நிலை குறித்து வேதனையுடன் தெரிவித்தார். நலிந்த கலைஞர்களுக்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.

விஷால் உதவி: நடிகர் விஷால் பிந்து கோஷின் நிலை அறிந்து மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்திருக்கிறார். இதையும் பிந்து கோஷ் பேட்டியில் தெரிவித்தார். மேலும், மருத்துவ செலவிற்கு ரூ.5 லட்சம் கேட்டிருந்தார். இதேபோன்று பலரும் தனக்கு உதவி செய்ததாக அவரே தெரிவித்திருந்தார். சமீபத்தில் KPY பாலா ஷகிலாவுடன் வந்து நேரில் பிந்துகோஷின் உடல்நலம் குறித்து விசாரித்து தன்னால் முடிந்த உதவியை செய்திருந்தார். இதுகுறித்த செய்திகளும் வெளியாகின.
மரணம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிந்து கோஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மக்களை சிரிப்பில் ஆழ்த்திய கலைஞர் மறைவில் மறைந்திருப்பது வருத்தத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.