ARTICLE AD BOX
ரசிகர்கள் கெஞ்சியும் நோ சொன்ன மணிகண்டன்.. அதிர்ந்த அரங்கம்.. வாயடைத்து போன பிரபலங்கள்!
சென்னை: குடும்பஸ்தன் படத்தின் வெற்றிக்கு பிறகு குதூகலத்துடன் இருக்கும் மணிகண்டன் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். தற்போது தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் குடும்பஸ்தன் படத்திற்காக மணிகண்டன் விருது பெற்றார். அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே மணிமேகலை மற்றும் KPY பாலாவும் ரசிகர்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கேட்டனர். அதற்கு மணிகண்டன் தயங்கியபடியே நோ சொன்னார். ஆனாலும், ரசிகர்கள் அடங்காமல் செய்த காரியம் மணிகண்டனுக்கே இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
பேக் டூ பேக் வெற்றி படங்களை கொடுத்து வரும் மணிகண்டன் அடுத்தபடியாக நீலம் புரொடக்சன் தயாரிக்கும் படத்தில் கேங்ஸ்டராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மணிகண்டன் ஒரு ஏரியாவில் நடக்கும் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் நடிகராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சற்று வடசென்னை சாயலில் படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் மணிகண்டனை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. அவரது படங்களின் வெற்றியை சக நடிகர்களும் தனது வெற்றியை போல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் கொண்டாட்டம்: சமீபத்தில் ஜீ5 ஓடிடியில் வெளியான குடும்பஸ்தன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை குடும்பம் குடும்பமாக பார்த்து ரசிக்க தொடங்கியுள்ளனர். திருமணத்திற்கு பின்பு ஒரு இளைஞன் குடும்பஸ்தனாக பணத்திற்காக படும் கஸ்டங்களை சொல்லியிருப்பதால் இப்படம் அனைவருக்கும் பிடித்த படமாகவும் மாறியுள்ளது. படத்தின் முதல் காட்சியில் ஹீரோயின் அவரை கட்டியணைக்கும் காட்சிகளுக்கு அப்லாஸ் கிடைத்துள்ளன. எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் தன்னை தாங்கி பிடிக்கும் ஒரு துணை கிடைத்தால் போதும் என்பதை இயக்குநர் ராஜேஸ்வர் காளிமுத்து ஒரு காட்சியில் காட்டி விட்டார் என்றும் பாராட்டுகின்றனர். இந்நிலையில், கோவையில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வாழ்த்து மழையில் நனைகின்றனர்.

காதலர்களின் ரீங்காரம் தேன் சுடரே: அதைத்தொடர்ந்து சென்னையில் நடந்த விழாவில் குடும்பஸ்தன் படத்திற்காக நடிகர் மணிகண்டன் விருது பெற்றார். தனியார் யூடியூப் சேனல் நடத்திய. இந்த விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். விருது பெற்ற பின்னர் மணிகண்டனை பார்த்து லவ்வர் படத்தில் இடம்பெற்ற தேன் சுடர் பாடல் உருவான விதம் குறித்து KPY பாலா கேட்டார். அதற்கு படம் எடுக்கும் போது பாடல் இடம்பெறவில்லை. காட்சிகளை முடித்துவிட்டு அப்பாடலை இணைத்து பார்க்கும்போது எனக்கே பிரம்மிப்பாக இருந்தது என மணிகண்டன் தெரிவித்தார். அப்போது KPY பாலா , அண்ணன் நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க ஆனால், இதை பார்த்துட்டு பலருக்கு கிட்னி, லிவர் பாதிப்பு வரை வந்திடுச்சு என ஜாலியாக கூறினார்.
ரசிகர்கள் கோஷம்: அதன் பிறகு மணிகண்டனிடம் வழக்கம் போல மிமிக்ரி செய்யுமாறு ரசிகர்கள் வற்புறுத்தினர். நீங்க இப்போ மிமிக்ரி பண்ண சொல்வீங்க.. அப்புறம் வீடியோ பார்த்து கமாண்டில் மிமிக்ரி யார் கேட்டா என கிண்டல் பண்ணுவீங்க என தக்லைஃப் செய்தார் மணிகண்டன். அவர் சொல்வதையும் தாண்டி ரசிகர்கள் அதிகமாக கோஷம் போட்டனர். மணிகண்டன் அண்ணன் நீங்க மிமிக்ரி பண்ணுங்க, கோபப்படமாட்டோம் என கத்த தொடங்கிவிட்டனர். பின்னர் பிதாமகன் படத்தில் சூர்யா பேசும் வசனத்தை மிமிக்ரி செய்து அரங்கத்தையே அதிர விட்டார். 3 நிமிடத்திற்கு ஓயாத சத்தத்தால் மணிகண்டனே மெய்சிலிர்த்து போனார். நன்றி என வார்த்தைகளால் சொன்னாலும் மனதால் ரசிகர்களை வென்று விட்டார். அவர் பேசியதை கேட்டு திரை பிரபலங்களும் வாயடைத்து போனார்கள்.