ARTICLE AD BOX
ரசிகர்களின் வருத்தத்தை என்ஜாய் செய்யும் புஷ்பா 2 பட நடிகை.. இப்படி ஒரு சங்கதி இருக்கா?
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுசுயா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியானது புஷ்பா 2 படம். இந்த படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் சிறப்பாக அமைந்த நிலையில் இரண்டாவது பாகம் மேலும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.
சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 1700 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்தது. இந்தப் படத்தின் அடுத்த பாகமும் உருவாகவுள்ளதாக முன்னதாக அல்லு அர்ஜுன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியானது புஷ்பா 2 படம். சிவப்பு சந்தன மரக்கடலை மையமாகக் கொண்டு இந்த படத்தின் முதல் பாகம் முன்னதாக வெளியான நிலையில் அந்த படம் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தார் இயக்குநர் சுகுமார். இந்த படம் ஏறக்குறைய 1700 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்த பாகமும் உருவாக உள்ளதாக முன்னதாக அல்லு அர்ஜுன் கூறியிருந்தார்.
நடிகை அனுசுயா பேட்டி: இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து அனுசுயா சுனில் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். மங்களம் ஸ்ரீனு மற்றும் தாட்சாயணி என்ற கேரக்டர்களில் சுனில் மற்றும் அனுசுயா நடித்துள்ளனர். இவர்களின் கேரக்டர்கள் முதல் பாகத்தில் மிகவும் அழுத்தமாக அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது ஸ்கிரீன் ஸ்பேசை அதிகமாக பார்க்க விரும்பியதாக அனுசுயா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ரசிகர்களின் வருத்தம்: இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் இவர்களின் கேரக்டர்கள் மேலும் சுருக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அனுசுயா, இரண்டாவது பாகத்தை காட்டிலும் முதல் பாகத்தில் தன்னுயை பங்கு அதிகமாக இருந்ததாக ரசிகர்கள் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். புஷ்பா தி ரூல் படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு குறைவான நேரம் கொடுத்துள்ளது குறித்து ரசிகர்களின் வருத்தம் தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக கூறியுள்ளார். இந்த வருத்தம் உண்மையில் பாராட்டுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகமான வசூல் படம்: மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான புஷ்பா 2 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சிறப்பாகவே பூர்த்தி செய்து பிரம்மாண்டமான வெற்றிப்படமாகியுள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், சாம் சிஎஸ் பின்னணி இசையை அமைத்திருந்தார். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய்களை வசூலித்தது. இதுவரை இத்தகைய வசூலை பெற்ற முதல் இந்திய படமாக புஷ்பா 2 படம் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.