ARTICLE AD BOX
நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக சரத் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எமோஷனலாக வெளியிட்டு உள்ளார்.
அதில் சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது. 12 வருடம் போராட்டத்திற்கு பிறகு ஒரு இடத்தை எங்கள் வீடு என்று அழைக்கும் நாள் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி என்னுடன் உறுதுணையாக இருந்த என் துணை கிருத்திகா க்ரிஷ் லவ் யூ மா என்று மனைவியை கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
The post நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. கே.பி.ஒய் சரத் எமோஷனல் பதிவு..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.