ARTICLE AD BOX
டிராகன் பட நடிகை கயடு லோஹர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயடு லோஹர். இவர் தற்போது கன்னடம் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதனின் நடிப்பிலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் வெளியான டிராகன் திரைப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் இந்தப் படத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறிவிட்டார் கயடு லோஹர். மேலும் இவர் இன்ஸ்டாகிராமிலும் பல கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கயடு லோஹர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ” எனக்கும், டிராகனுக்கும் பல்லவிக்கும் கிடைக்கும் அன்பு மிகையில்லாத உணர்வு. நான் தமிழ் பொண்ணு இல்லை. எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ரசிகர்களின் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. உங்களுடைய அன்பு விலைமதிக்க முடியாதது. இந்த அன்பை என்னுடைய படங்களின் மூலம் திருப்பித் தருவேன். தமிழ் ரசிகர்களை பெருமைப்படுத்துவேன். இதைவிட வேறு எதுவும் வேண்டாம் எனக்கு” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.