ரசிகரின் செயலால் கடுப்பான நடிகர் உன்னி முகுந்தன்.. வைரலாகும் வீடியோ

1 day ago
ARTICLE AD BOX

உன்னி முகுந்தன்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். இவர் தனது திரை வாழ்க்கையை தமிழில் இருந்து தான் துவங்கியுள்ளார்.

ஆம், தனுஷின் நடிப்பில் உருவான சீடன் படம்தான் இவருடைய அறிமுக திரைப்படமாகும். இதன்பின், மலையாள சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய உன்னி முகுந்தன் பல ஹிட் படங்களை கொடுத்தார்.

தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் சமீபத்திய ப்ளாக் பஸ்டர் மார்கோ இவரை மிரட்டலான ஆக்ஷன் ஹீரோவாக காட்டியது. மார்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து உன்னி முகுந்தன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் கெட் செட் பேபி. இப்படம் கடந்த 21ம் தேதி வெளிவந்தது.

கடுப்பான உன்னி முகுந்தன்

இந்த நிலையில், பிரபல திரையரங்கில் படம் பார்க்க வந்த நடிகர் உன்னி முகுந்தன் ரசிகரின் செயலால் கடுப்பாகி அவருடைய போனை பிடுங்கிவிட்டார்.

தன் முகத்துக்கு முன் போனை வைத்து அந்த ரசிகர் வீடியோ எடுத்து வந்ததால் கடுப்பான உன்னி முகுந்தன் இப்படி செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

Read Entire Article