Dragon: "'டிராகன்' படம் நான் அவர்களுக்குச் சொல்லும் மன்னிப்பு" - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

3 hours ago
ARTICLE AD BOX
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிரபலங்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காலேஜில் ஜாலியாக, கெத்தாக சுற்றித் திரியும் இளைஞர் வாழ்க்கையின் காதல், பிரேக் அப், கரியர், குடும்பத்தின் நிலை பற்றி ஜாலியாகப் பேசியிருக்கிறது இப்படம். கல்வி பற்றியும் எவ்வளவு கஷ்டத்திலும் நேர்மையை கைவிடாத பெற்றோர் என அழுத்தமான மெசேஜை சொல்கிறது.

டிராகன்

இந்நிலையில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்கு பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இருவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தற்போது, தனது பெற்றோர் குறித்து அஸ்வத் மாரிமுத்து, "இவர்கள்தான் என் பெற்றோர்.

மாரிமுத்து என்கிற தனபால், எங்கபோனாலும் ஜோல்னா பையோடதான் போவார். என் அம்மா சித்ரா.

12 ஆம் வகுப்புக்குப் பிறகு நான் டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் நான் ஒரு மோசமான ஆங்கில மாணவனானேன். பிறகுதான் நான் செய்த தவறுகளை உணர்ந்தேன். 'டிராகன்'படம் நான் அவர்களுக்குச் சொல்லும் மன்னிப்பு" என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Read Entire Article