யோகி பாபு நடிக்கும் "லெக் பீஸ்" படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் வெளியீடு

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'லெக் பீஸ்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'டிக்கிலா டிக்கிலா.'எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெக் பீஸ்' எனும் திரைப்படத்தில் யோகி பாபு , வி டி வி கணேஷ் , ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ் , மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாசாணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜோர்ன் சுர ராவ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. மணிகண்டன் தயாரித்திருக்கிறார்.

திரைப்படத்தில் இடம் பெற்ற 'டிக்கில டிக்கில' எனத் தொடங்கும் முதல் பாடலை பாடலாசிரியர்கள் விக்னேஷ் ராமகிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர ராவ் ஆகியோர் இணைந்து எழுதி இருக்க, பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிஜோர்ன் சுர ராவ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துரித தாள கதியில் அமைந்த இந்தப் பாடலும், வணிகத் தனம் மிக்க பாடல் வரிகளும் ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

யோகி பாபு நடித்த 'லெக் பீஸ்' படம் வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி வெளியாகிறது. 'லெக் பீஸ்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் 'லெக் பீஸ்' படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் வெளியாகியுள்ளது.

The second single is here! #ChikangGokkang from #LegPiece is out now!Watch now ▶️ https://t.co/1b4I3ceZnpVocals by the legendary #TRajendar Sir! ✨#LegpieceFromMarch7th #Manikandan @Actor_Srinath @iYogiBabu #Karunakaran @thilak_ramesh @Bjornsurrao #HeroCinemas pic.twitter.com/cMHmpqdKY2

— New Music (@NewMusicIndia) March 3, 2025

Read Entire Article