யுவன் சங்கர் ராஜா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! பிரபலங்கள் பங்கேற்பு..

2 hours ago
ARTICLE AD BOX

Sweet Heart Movie Trailer Released : 'ஸ்வீட்ஹார்ட் ' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். 

மார்ச் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம்‌, கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இயக்குநர் இளன் பேசுகையில், '' யுவன் சாரை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்தது.  இந்தப் படத்தை பற்றி எதுவும் தெரியாது. நண்பர்களிடம் 'பியார் பிரேமா காதல்' போல் இருக்குமா? என கேட்டேன். அதற்கு அவர் பணிவாக 'இருக்கலாம்' என்று சொன்னார். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு படம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இப்படத்தில் உள்ள 'ஆஸம் கிஸா..' என்ற பாடல் வேற லெவலில் உள்ளது.  யுவன் சங்கர் ராஜாவிற்கு 'மார்டன் மாஸ்டரோ', 'கிங் ' என பல பெயர்கள் இருந்தாலும் அவருடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒரே வார்த்தை தான் இந்த படத்தின் டைட்டில் அவர் ஒரு ஸ்வீட்ஹார்ட்.  இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ''  யுவனுடன் இணைந்து பாடல் கம்போசிங் செய்வது ஜாலியான அனுபவமாக இருக்கும். முதலில் அவரிடமிருந்து எப்படி பாடல்களை பெறுவது என்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவருடன் பத்து நிமிடம் பழகியவுடன் அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என்பதை தெரிந்து கொண்டேன்.

ரியோ நன்றாக நடிக்கிறார். அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன் பி & சி ரசிகர்களுக்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும். ஏனெனில் பி & சி என்பது மிகவும்  பவர்ஃபுல் மீடியம்.  அவர்களுக்காக ஒரு படத்தில் நடித்தால் உங்கள் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும். 

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், '' என் தலைவன் யுவன் சங்கர் ராஜா  தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கும் , இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய மனைவிக்கு லவ் யூ என்று சொல்கிறோமோ... இல்லையோ.. 'ஸ்வீட் ஹார்ட் 'என்று சொல்லாமல் கடக்க முடியாது. 

ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி அண்ணன் , '' ஏண்டா அந்த கேள்வியை என்ன பார்த்து கேட்ட?' என ஒரு டயலாக் பேசுவார். அதே போல் இந்தப் படத்தில் அது போன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்கு எப்படி தோன்றியது? என்று தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறேன். 

கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என சொல்வார்கள். அதற்கு எப்போதும் உதாரணம் ரியோ ராஜ் தான். அவன் நடித்த இந்தப் படமும் ஹிட்டாகும். அடுத்த படமும் ஹிட்டாகும். அவருடைய பயணம் இனி வெற்றி தான். பொதுவாக காதலை சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா.. ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பாடல்களை சொல்லித்தான் காதலைச் சொல்வார்கள். ஆனால் நான் என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலை தான் காதலுக்காக சொன்னேன். இதற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 

தயாரிப்பாளர்-  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ''  மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. 

இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால்.. முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதில் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் உண்மையில் இதுதான் நடந்தது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு பாடல்களை இணைத்தோம். அதன் பிறகு இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.  மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் 'ஸ்வீட்ஹார்ட்: படத்தை பார்க்க திரையரங்குகளில் சந்திப்போம் '' என்றார்.

மேலும் படிக்க | பிக் பாஸ் 8: வெளியில் வந்தும் சண்டை போடும் முத்துக்குமரன்-செளந்தர்யா! என்ன பிரச்சனை?

மேலும் படிக்க | குடும்பஸ்தன் படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article