யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய ரயில் பாதை!

3 hours ago
ARTICLE AD BOX

ரயில் பயணம் சுகமான அனுபவத்தை தரும். அதுவும் இயற்கை காட்சிகள் நிறைந்த கின்னஸ் சாதனை படைத்த இந்திய ரயில் பாதையில் பயணிக்கும் போது அடையும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இருக்காது.

ஹரியானாவில் உள்ள கல்காவிலிருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா வரை செல்லும் 96 கி.மீ. நீண்ட தூர ரயில் பாதை தான் இயற்கையின் அற்புதமான அழகை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

இந்த ரயில் பாதையில் பயணிக்கும் போது பூலோக சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். ஏனென்றால் அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள், பனி மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என அனைத்து வகையான வானிலைகளையும் இங்கு காணலாம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?
Indian Railways

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த ரயில் பயணத்தை மேற்கொண்டால் மெய்சிலிர்க்க நேரிடும். ஏனெனில் இந்த மூன்று மாதங்களில் பாதை முழுவதும் பனியால் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.

இந்த ரயிலில் பயணிக்கும் போது 20 ரயில் நிலையங்களை கடக்கலாம். இந்த ரயில் 103 சுரங்கப்பாதைகள் வழியாக செல்கிறது. மேலும், 912 பள்ளத்தாக்குகளையும் 969 பாலங்களையும் கடக்கிறது.

இந்த ரயில் பாதை இந்திய ரயில்வேயின் கிரீடம் என்று அழைக்கப்படுகிறது. 2008-ல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. இந்திய ரயில்வே 1903-ம் ஆண்டு ஹரியானாவின் கல்காவிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா வரை இந்த ரயில் பாதையைத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
சிவப்பு நிற ரயில்களுக்கும் நீல நிற ரயில்களுக்கும் என்ன வித்தியாசம்?
Indian Railways

இங்கு செல்ல முதலில் டெல்லி சென்றடைய வேண்டும். நீங்கள் ரயில் அல்லது விமானம் மூலம் டெல்லியை அடைந்து, அங்கிருந்து கல்கா நகரத்தை அடையலாம். அல்லது டெல்லியில் இருந்து நேரடியாக சிம்லா சென்று அங்கிருந்து கல்காவிற்கு ரயில் மூலம் பயணம் செய்யலாம்.

மேற்கூறிய ரயில் பாதையை பற்றி படிக்கும் போது அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது நிச்சயமே!

Read Entire Article