ஜமைக்கா நாட்டில் நெல்லை வாலிபர் சுட்டுக் கொலை: உடலை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணிப்புரிந்த தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், 18.12.2024 அன்று அங்கு நடந்த கொள்ளை முயற்சியில், கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

விக்னேஷின் உடலை தமிழ்நாடு கொண்டு வரக்கோரிய அவரது குடும்பத்தினரின் கோரிக்கையினை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம், ஜமைக்கா நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அவர் பணிப்புரிந்த நிறுவனம் தொடர்பு கொள்ளப்பட்டு, உயிரிழந்த விக்னேஷின் உடலை தமிழ்நாடு கொண்டு வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விக்னேஷின் உடல் 30.12.2024 அன்று உடல் கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கான இழப்பீட்டை அவர் வேலை செய்த நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து வழங்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும், அன்னாரது உடலை தமிழ்நாடு கொண்டுவருவதற்கான செலவினத்தை தமிழக அரசே ஏற்கும். விக்னேஷ் வேலை செய்த நிறுவனத்துடன், தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, நிலைமை தொடர்ந்து அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தினால் கண்காணிக்கப்பட்டு, உடலை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உடல் தமிழ்நாடு கொண்டு வரப்படும் நிலையில் விமான நிலையத்திலிருந்து, அவரது இல்லம் வரை அரசின் கட்டணமில்லா அமரர் ஊர்தி மூலம் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read Entire Article