யார் அந்த SIR.!திசை திருப்ப முயல்வது ஏன்.? உடனடியாக சிபிஐக்கு மாற்றுங்க- விளாசும் எடப்பாடி

3 hours ago
ARTICLE AD BOX

மாணவி பாலியல் கொடுமை வழக்கு

அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டான். இதனிடையே மாணவி வாக்குமூலத்தோடு எப்ஐஆர் வெளியானது. அதில் மாணவியின் பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியானது. தமிழக அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் வழக்கின் பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்ற வகையில் எப்ஐஆர் வெளியிடக்கூடாது. ஆனால் காவல்துறையினர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த போது உடனடியாக லாக் ஆகாத காரணத்தில் எப்ஐஆர் பதிவிறக்கம் செய்யப்பட்டு செய்திகளில் நடந்த சம்பவம் வெளியானது.

வெளியான எப்ஐஆர்

அதில் தான் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனைடுத்து தான் யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழு எப்ஐஆர் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. பத்திரிக்கையாளர்களை விசாரணைக்கு அழைத்த குழு போன்களை பறிமுதல் செய்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாகவும் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. 

யார் அந்த சார்

இந்த நிலையில் இந்த சம்பவம்  தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக செய்திகள் வருகின்றன. பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.

சிபிஐக்கு மாற்றுங்கள்

உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுகிறது. யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற , முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்! எனவே யார் அந்த SIR என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற  வேண்டும் என வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

Read Entire Article