யாரா இருந்தாலும், இந்த உண்மைய தெரிஞ்சுக்கிட்டு சேப்பங்கிழங்கு சாப்பிடுங்க! 

4 hours ago
ARTICLE AD BOX

சேப்பங்கிழங்கு, மலிவான விலையில் கிடைக்கும் ஒரு அற்புத உணவுப்பொருள். ஏழைகளின் உணவு என்று சொல்லப்பட்டாலும், இதில் அடங்கியுள்ள சத்துக்கள் விலைமதிப்பற்றவை. வைட்டமின் ஏ, பி6, சி, ஈ மட்டுமின்றி கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கார்போஹைட்ரேட் என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் குவிந்துள்ளன. 

சேப்பங்கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் அபரிமிதமாக நிறைந்துள்ளதால், எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செரிமான பிரச்சனைகளை சரிசெய்து, குடல் புண்களை ஆற்றும் திறன் கொண்டது. 

மேலும், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் குடல் அழற்சி நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதாகவும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்துக்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து, சரும நோய்கள் மற்றும் காயங்களை குணப்படுத்தவும் சேப்பங்கிழங்கு உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
நஞ்சாகவும் மாறும் வைட்டமின் டி - எப்போது?
Cheppankizhangu

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. இது இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பெருக்குகிறது. பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் அரிப்பு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கும் சேப்பங்கிழங்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. எனினும், குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்கு பிறகு கொடுப்பது நல்லது.

சேப்பங்கிழங்கில் மாவுச்சத்து அதிகமாக இருந்தாலும், புரதச்சத்தும் கணிசமாக உள்ளது. பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராகவும் இது போராடும் திறன் கொண்டது. கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கும் இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. சேப்பங்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நரம்புகள் வலுப்பெறும். 

இதையும் படியுங்கள்:
Sciatica: இந்த இடுப்பு நரம்பு பிரச்சனை பற்றி தெரியுமா?
Cheppankizhangu

நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் சேப்பங்கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சேப்பங்கிழங்கை மண்ணிலிருந்து எடுத்தவுடன் சமைக்கக்கூடாது. சில நாட்கள் கழித்து அல்லது காயவைத்து பயன்படுத்தினால் அரிப்புத் தன்மையை குறைக்கலாம். சமைக்கும்போது புளி அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பது அரிப்பை மேலும் குறைக்கும். சேப்பங்கிழங்கை பச்சையாக சாப்பிடக்கூடாது.

யார் யாரெல்லாம் சேப்பங்கிழங்கை சாப்பிட வேண்டும் என்று பார்த்தால், ஜீரண கோளாறு உள்ளவர்கள், உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள், சரும நோய் உள்ளவர்கள் மற்றும் இரத்த ஓட்டம் சீராக இல்லாதவர்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனால், பக்கவாதம் மற்றும் இதயம் பலவீனமானவர்கள் சேப்பங்கிழங்கை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

இத்தகைய சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

Read Entire Article