மோடி அரசு அமெரிக்காவை எதிர்த்து நிற்க வேண்டும்: காங். வலியுறுத்தல்

7 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகள் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அமெரிக்காவிடம் கூற வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரான அஜய் குமார், வீடியோ காட்சி ஒன்றை காட்டினார். அதில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி அமைதியாக இருப்பதும், இதேபோல் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அமெரிக்க அதிபரின் உரையாடலை திருத்தி தவறாக கூறுவதை சுட்டுக்காட்டுவதும் இருந்தது.

இதனை தொடர்ந்து பேசிய அஜய் குமார், ‘‘பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டிரம்ப் உரையாடலின்போது அதனை திருத்தி தவறு என்று கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். மறுபுறம் பிரதமர் மோடியின் முன் டிரம்ப் இந்தியாவை பற்றி தொடர்ந்து தவறாக பேசுகிறார். அவர் இந்தியாவை வரிகளை மீறுபவர்கள் என்று அழைக்கிறார். பரஸ்பர வரிகளை விதிப்போம் என்று கூறுகின்றார். ஆனாலும் பிரதமர் மோடி அமைதியாகவே இருந்தார். டிரம்பை தனது சிறந்த நண்பர் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

ஆனால் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை அவமானப்படுத்த முயற்சிக்கிறார். பாஜவினர் மோடியை விஸ்வ குரு என்று கூறுவதில் ஒருபோதும் சோர்வடைய மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது அவரை வரவேற்பதற்கு டிரம்ப் வரவில்லை. ஆப்பிள் போன்ற பொருட்களுக்கான விலை மதிப்பு பட்டியலை அமெரிக்கா நீக்கிவிட்டால் இமாச்சலப்பிரதேச ஆப்பிள் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.

திராட்சை மீதான விலை பட்டியல் நீக்கப்பட்டால் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் பாதிக்கப்படும். இதேபோன்று வாகனங்களுக்கு செய்தால் இந்திய கார் சந்தை பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். எனவே அமெரிக்க அரசை ஒன்றிய அரசு எதிர்த்து நிற்க வேண்டும், பரஸ்பர வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர்களிடம் அரசு வலியுறுத்த வேண்டும்” என்றார்.

The post மோடி அரசு அமெரிக்காவை எதிர்த்து நிற்க வேண்டும்: காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article