ARTICLE AD BOX
டீ கடை வெங்காய போண்டா
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம்_1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது _25 கிராம்
கடலைமாவு _125 கிராம்
மைதாமாவு _150 கிராம்
பச்சரிசிமாவு _75 கிராம்
கேசரிப்பவுடர் _1/4 ஸ்பூன்
சோடா உப்பு _1/2 ஸ்பூன்
புதினா தழை _1 கைப்பிடி
மல்லித்தழை _1 கைப்பிடி
கருவேப்பிலை _ 2 கொத்து
சோம்பு _1 ஸ்பூன்
கரம் மசாலா _1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் _1/2 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
எண்ணெய் _1/2 லிட்டர்
செய்முறை: முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் சற்று பெரிதாகவே வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கிய கருவேப்பிலை, புதினா, மல்லித்தழை, சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, பச்சரிசி மாவு, மிளகாய்த்தூள், தேவையான உப்பு, கேசரிப்பவுடர், சோடா உப்பு, மைதா மாவு, கரம் மசாலா அனைத்தையும் ஒன்று சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு உதிரியாக இருக்கும் படி பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா பக்குவத்தில் பிசைந்ததும் (உடனடியாக பொரித்து விட வேண்டும். இல்லை என்றால் நீர் விட்டு விடும்) எண்ணெய் சட்டையை அடுப்பில் வைத்து மாவை குண்டாக போடாமல் சிறிது அழுத்திப்போட்டு போண்டா வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
மொறு மொறுப்புடன் கூடிய வெங்காய போண்டாவை டீ யுடன் சுவைத்து சாப்பிட மகிழ்ச்சி அளிக்கும்.
கிராமத்து பப்பாளி பாசிபயறு கறி
தேவையான பொருட்கள்:
பப்பாளிக்காய் _1/2
பச்சை மிளகாய் _3
கருவேப்பிலை _ சிறிதளவு
மஞ்சள்த்தூள் _1/2 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
முழு பாசிபயறு _ 1/2 கப்
அரைக்க:
சின்ன வெங்காயம் _3
பூண்டு _3 பற்கள்
தேங்காய் துருவல் _1 கப்
சீரகம் _1/4 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் _11/2 டீ ஸ்பூன்
செய்முறை: பப்பாளிக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து பப்பாளித் துண்டுகளை போட்டு அத்துடன் பச்சை மிளகாய் கறிவேப்பிலை, மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்..
பின்னர் முழு பாசிபயறை குக்கரில் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பயறு நன்றாக வெந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். பின்னர் அரைக்க கொடுத்த பொருட்களை தேவையான தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின்னர் வெந்த பப்பாளி காயுடன் வேகவைத்த பயிறை சேர்த்து, அரைத்த மசாலா வையும் சேர்த்து, உப்பு மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துவிட்டு கொதிக்க விடவும். பயறு வெந்து பப்பாளி துண்டுகளோடு சேர்ந்து நன்கு கொதித்ததும் இறக்கி வைத்துவிடவும்.
பின்னர் தாளிக்க வாணலியை அடுப்பில், 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கடுகு சேர்த்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் வற்றல், சதைத்த பூண்டு வதக்கி குழம்பில் ஊற்றவும். சூப்பர் சுவையுடன் கேரளா, கிராமத்து பப்பாளி கறி தயார்.