ARTICLE AD BOX
பாலக் பக்கோடி:
பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது. இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரை பிடிக்காதவர்களுக்கு கூட இவ்வாறு பக்கோடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்:
செய்முறை:
250g பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ள வேண்டும். பிறகு அதை நறுக்கி நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கடலை மாவுடன் நறுக்கிய கீரை, உப்பு, சிறிதளவு ஓமம், பொடி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி பக்கோடி போடுவதற்கு ஏற்றவாறு கலக்கவும். தண்ணீர் அதிகமாக இருக்கக் கூடாது. பிறகு வாணலியில் எண்ணெய் வைத்து சூடான பிறகு கலவையை கைகளால் உதிர் உதிராக போட்டு பொறிக்கவும். சூடான மொறு மொறு பாலக் பக்கோடி ரெடி. மாலை வேளையில் டீயுடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
வாழைப்பூ வடை:
வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும். வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.
மதியவேளையில் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வாழைப்பூவில் வடை செய்தும் சாப்பிடலாம்.
செய்முறை:
முதலில் ஒரு கப் கடலைப் பருப்பையும் ¼ கப் துவரம் பருப்பையும் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு மணிநேரம் ஆன பின்பு பருப்புடன் நான்கு காய்ந்த மிளகாய் மற்றும் இரண்டு ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கவும். கொற கொற வென அரைத்துககொள்ளுங்கள். அதிக பசையாக அரைத்தால் வடை crispy ஆக இருக்காது.
இத்துடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத் தூள், ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ (10 – 15 பூ) மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை போட்டு கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு வடையை தட்டி போட்டு எடுக்கவும். தீயை மிதமாக வைத்து எடுக்கவும். மிகவும் crispy ஆக இருக்கும்.