"மை லார்ட்" படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய சசிகுமார்

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கருடன், நந்தன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'டூரிஸ்ட் பேமலி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Get a sneak peek into the dubbing pooja of #MyLord in this video ️✨Coming soon to theatres near you - stay tuned for more updates!@SasikumarDir @Dir_Rajumurugan @ambethkumarmla @Olympiamovis #ChaithraJAchar @gurusoms @RSeanRoldan #NiravShah #sathyarajnatrajan pic.twitter.com/8H7KuXSx1z

— Olympia Movies (@Olympiamovis) February 1, 2025

சசிகுமார் நடிக்கும் "மை லார்ட்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் "மை லார்ட்" படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த டப்பிங் பணியின் போது எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Read Entire Article