ARTICLE AD BOX
தமிழ்திரையுலகில் 25வது படம் மற்றும் 50வது திரைப்படம் இரண்டையும் ஹிட் கொடுத்த ஒருசில ஹீரோக்களில் தன்னுடைய பெயரையும் முத்திரை பதித்த தனுஷ், இயக்குநராக 4வது திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படம் ரூ.150 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் தனுஷின் அதிகப்படியான வசூல் திரைப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தில் அவரே நடித்தது மட்டுமில்லாமல் ராயன் திரைப்படத்தை இயக்குநராகவும் மாறி டைரக்ட் செய்திருந்தார் தனுஷ்.
ராயனுக்கு பிறகு 51வது திரைப்படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கும் தனுஷ், 52வது திரைப்படமாக இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
குழப்பத்தை ஏற்படுத்திய தனுஷ்..
தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்பட்ட நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் அதேநாளில் வருவது உறுதிசெய்யப்பட்டது. இந்த சூழலில் இட்லி கடை படம் தள்ளிப்போகும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக படம் குறிப்பிட்ட பிப்ரவரி 10-ம் தேதி வெளியாகும் என மீண்டும் உறுதிசெய்துள்ளார் தனுஷ்.
இட்லி கடை படத்தின் முந்தைய போஸ்டர்கள் எல்லாம், அத்திரைப்படம் கிராமப்புற பின்னணியில் உருவாக்கப்பட்டிருப்பதை போன்றே காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது விடப்பட்டிருக்கும் போஸ்டரில் அருண் விஜய் பாக்ஸராகவும், படம் நகரத்தில் இருப்பது போலவும் தெரிகிறது. இந்நிலையில் படம் உண்மையில் எந்த பின்னணியில் அமைந்திருக்கிறது என்ற குழப்பத்தை தனுஷ் ஏற்படுத்தியுள்ளார். இதற்கு தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் அசத்தியிருப்பார். அந்தப் படத்தில் சென்னை நகரத்தில் கதை தொடங்கினாலும் பிளாஷ்பேக் காட்சிகள் கிராமப் பின்னணியில் இருக்கும். அதேபோல், இட்லிக்கடை படத்தின் கதையும் கிராமம், நகரம் என இரண்டின் பின்னணியிலும் இருக்குமோ என யோசிக்கத் தோன்றுகிறது.
அதுமட்டுமில்லாமல் அருண் விஜய் படத்தில் இருப்பதை போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். இட்லி கடையின் புதிய போஸ்டருக்கு பிறகு தனுஷுக்கு அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.