காரில் செல்பவர்களுக்கு எச்சரிக்கை.! வடிவேலு பட பாணியில் நடக்கும் கொள்ளை.!

3 hours ago
ARTICLE AD BOX

வடிவேலு காமெடி

வடிவேலுவின் படம் ஒன்றில் சிலர் குழுவாக சேர்ந்து கொண்டு செயற்கையாக விபத்தை ஏற்படுத்துவது போல நடித்து வாகனம் ஓட்டி வருபவர்களிடம் பணம் பறித்து அந்த குழுவினர் அனைவரும் ஆளுக்கு கொஞ்சமாக கொள்ளை அடித்த பணத்தை பிரித்துக் கொள்வார்கள்.

நூதன வழிப்பறி

இது மிகவும் வேடிக்கையாக காட்டப்பட்டிருந்த நிலையில், அப்படி ஒரு சம்பவம் பெங்களூருவில் நிஜமாகவே நடந்து வருகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? பெங்களூரு பகுதியில் கார் முன்பு வம்படியாக வந்து விழும் அவர்கள் பணம் பறிக்க முயலும் வீடியோ தற்போது டேஷ் கேமில் பதிவாகி அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: பஸ்ஸுக்கு காத்திருந்த தமிழக பெண், கூட்டு பாலியல் பலாத்காரம்.! பெங்களூரில் அதிர்ச்சி.!

ஆதரவுக்கு வரும் இருவர்

ஆள் அரவமில்லாத இடங்களில் திடீரென காருக்கு முன்பாக மர்ம நபர்கள் வந்து விழுகின்றனர். கார் ஓட்டி செல்பவர்கள் பிரேக் அடித்து விட்டால் கூட விபத்து ஏற்பட்டது போல அவர்கள் நடிக்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நம்மிடம் இருந்து பணத்தை பறித்து செல்வதாக இருவர் வந்து சேர்ந்து கொள்கின்றனர்.

டேஷ்கேமின் அவசியம்

காரில் செல்லும்போது பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. இதுபோல உங்களுக்கும் மோசமான அனுபவம் ஏற்படாமல் இருக்க டேஷ் கேமை உங்களது காரில் பொருத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: மணமேடையில்.. தாய் செய்த காரியம்.. பதறிப்போன மணமகன்.. இறுதியில் உறுதியான முடிவு.!

Read Entire Article