ARTICLE AD BOX
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே உலக வங்கி, அன்னிய செலாவணி நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி நிலைமையை சமாளிக்கிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.
இந்தநிலையில் தற்போது அந்த நாட்டு மதிப்பில் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1 மற்றும் டீசல் ரூ.7 உயர்த்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Related Tags :