மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்கள் பணி நிலைப்பு: அன்புமணி வேண்டுகோள்

15 hours ago
ARTICLE AD BOX

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அனல் மின்நிலையத்தின் முறையே 210*4 மெகாவாட், 600 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 1500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பிப்ரவரி 28ம் தேதி தொடங்கி 3ம் நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராடும் தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது.

அவர்கள் அனைவரும் மேட்டூர் அனல் மின்நிலையத்தில், பல்வேறு நிறுவனங்களின் மூலமாக 10 முதல் 13 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக களமிறங்கி போராடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்கள் பணி நிலைப்பு: அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article