மே.வங்கம் கனிமொழி எம்.பி.. கேரளா பிடிஆர்! முதலமைச்சரின் அதிரடித் திட்டம்!!

12 hours ago
ARTICLE AD BOX

பாராளுமன்ற தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து மார்ச் 25ம் தேதி தென் மாநிலங்கள் மற்றும் மே.வங்கம், பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் சார்பில் மேற்கண்ட மாநிலத் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவும், முதலமைச்சரின் எண்ணங்களையும் திட்டங்களையும் விரிவாகப் பேசவும் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர்களை அனுப்ப உள்ளார்.

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திக்க கனிமொழி எம்.பி கொல்கத்தா விரைகிறார். திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்க அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செல்கிறார். ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் ரெட்டியை சந்தித்துப் பேச அமைச்சர் எ.வ.வேலு செல்ல உள்ளார். ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஐ சந்திக்க அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செல்ல உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read Entire Article