மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்ஸி..! மமதா பானர்ஜி நெகிழ்ச்சி!

10 hours ago
ARTICLE AD BOX

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை பரிசாகப் பெற்றுள்ளார்.

கால்பந்து உலகில் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் ஏராளம். அவரைப் போல பந்தினைக் கட்டுப்படுத்தி விளையாடுபவர்கள் மிக மிகக் குறைவு என விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள்.

2022 கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வென்றது.

தற்போது, மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் மெஸ்ஸி காயம் காரணமாக 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

நம் காலத்தின் மேதை மெஸ்ஸி

இந்நிலையில் மமதா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

கால்பந்து எனக்கு மிகவும் ஆர்வமானது. அது எனது நரம்புகளில் ஓடியிருக்கிறது. இதேபோல் மேற்கு வங்கத்தில் உள்ள ஒருமுறையாவது பந்தினை திடலில் உதைத்த ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வு இருக்கும். இன்று, அந்த உணர்வுக்கு சிறப்பு கிடைத்துள்ளது. மெஸ்ஸியிடமிருந்து கையெழுத்திடப்பட்ட ஜெர்ஸி எனக்குக் கிடைத்திருக்கிறது.

கால்பந்து மீதான நேசம்தான் எங்களை இணைக்கிறது. கால்பந்தின் கலைஞன் மெஸ்ஸி, நம் காலத்தின் மேதை. புத்திசாலிதனத்தின் முன்மாதிரியாக விளங்கும் மெஸ்ஸியை மேற்கு வங்கம் பாராட்டுகிறது.

இந்த ஜெர்ஸி மேற்கு வங்கத்திற்கும் அழகான போட்டியான கால்பந்துக்குமான பிரிக்க முடியாத இணைப்பைக் குறிக்கும் அடையாளமாக இருக்கும் என்றார்.

Football is a passion that runs through my veins, much like every person in Bengal who has ever kicked a ball on the 'para' fields. Today, that passion found a special place as I received a jersey signed by none other than Lionel Messi.

The love for football binds us all, and… pic.twitter.com/ykWGarhAfG

— Mamata Banerjee (@MamataOfficial) March 19, 2025
Read Entire Article