வரி விவகாரத்தில் போட்டு தாக்காமல் விட மாட்டார் போல.. இந்தியாவை மீண்டும் குறிவைத்த டிரம்ப்

14 hours ago
ARTICLE AD BOX

வரி விவகாரத்தில் போட்டு தாக்காமல் விட மாட்டார் போல.. இந்தியாவை மீண்டும் குறிவைத்த டிரம்ப்

New York
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

நியூ யார்க்: இந்தியாவுடன் மிகச்சிறந்த நட்புறவை அமெரிக்கா கொண்டு இருப்பதாகவும் ஆனால் ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு மிக அதிக வரியை விதிக்கிறது. ஏப்ரல் 2 ஆம் தேதி பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று மீண்டும் டிரம்ப் பேசியிருக்கிறார். இதன் மூலம் வரி விவகாரத்தில் தனது கடுமையான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை டிரம்ப் மீண்டும் உறுதி செய்து இருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வரி விவகாரத்தில் டிரம்ப் கடும் கெடுபிடி காட்டுகிறார். அமெரிக்க நலன்களுக்கே முதலில் முன்னுரிமை எனக் கூறும் டிரம்ப், பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தினார். இதில், சீனாவும் அடங்கும்.

us-president-donald-trump-reiterated-his-threat-to-impose-reciprocal-us-tariffs-on-india

ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து பரஸ்பர வரி

இந்தியாவை வரி அரசன் என்று விமர்சித்த டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும் என்றும் கூறிவருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து பரஸ்பர வரி விதிப்பு அமல்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.

இத்தகைய சூழலில் வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சாட்டியிருக்கிறார், டிரம்ப். அமெரிக்காவில் பேட்டி அளித்த டிரம்ப் இது தொடர்பாக கூறியதாவது:- இந்தியாவுடன் நல்ல நட்புறவு உள்ளது. அந்த நாட்டிடம் உள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால் உலக அளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து பரஸ்பர வரி விதிப்பு தொடங்கும். அவர்கள் வரி வதிப்பை கணிசமாக குறைப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்தியா எவ்வளவு விதிக்கிறதோ அதே அளவு

இல்லை என்றால் ஏப்ரல் 2 ஆம் தேதி அவர்கள் என்ன வரி விதிக்கிறார்களோ அதே அளவுக்கு வரி விதிக்கப்படும்" என்றார். இந்தியா - மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார பாதை திட்டம் குறித்து பேசிய டிரம்ப், 'மிகச்சிறந்த நாடுகளின் கூட்டமைப்பு அது. எங்களை வர்த்தக ரீதியாக பாதிக்கும் நாடுகளுக்க்கு பதிலடி கொடுப்பதாக அது இருக்கும்" என்றார். முன்னதாக கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் மோடியுடன் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற டிரம்ப், இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு பதிலடி

இந்தியாவில் எந்த ஒரு பொருளையும் விற்பது கடினம் என்றும் மிக கடுமையாக வரியை விதிக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். இதன் தொடர்ச்சியாக கடந்த 7 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "அமெரிக்காவுக்கு அதிக வரிகளை விதிக்கும் இந்தியா தற்போது வரியை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது'' என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான், அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைப்பது தொடர்பாக எந்த முடிவையும் இந்தியா எடுக்கவில்லை என்று மத்திய அரசு கூறியது.

நாடாளுமன்ற குழுவிடம் மத்திய வர்த்த துறை செயலாளர் சுனில் பரத்வால் இதை உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், "வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை" என்று விளக்கம் அளித்து இருந்தார்.

More From
Prev
Next
English summary
The US has a very good relationship with India, but the only problem is that India is imposing very high tariffs on American goods. Trump has once again said that reciprocal tariffs will be imposed on April 2. With this, Trump has once again confirmed his firm stance on the tariff issue.
Read Entire Article