ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/02/23/screenshot-2025-02-23-122058-953453.png)
முதியோர்களின் நண்பனாக இருக்கும் முடக்கத்தான் கீரை பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது. வாதம் தொடர்பாக ஏற்படும் முடக்குகளை அறுக்கும் திறன் கொண்டுள்ளதாலேயே இது முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்ற பல பெயர்களையும் கொண்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/02/23/screenshot-2025-02-23-122043-307696.png)
எண்ணற்ற பலன்களை அள்ளிக்கொடுக்கும் முட்டக்கத்தான் கீரையின் மருத்துவ மகிமைகளை சித்த மருத்துவர் விக்ரம் குமார் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார். அதிலிருந்து சில உங்களுக்காக.
/indian-express-tamil/media/media_files/2025/02/23/screenshot-2025-02-23-122049-833569.png)
இது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், மூச்சுத்திணறல் , சுவாசப்பாதையில் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு பலன் தருவதால் கேரளாவில் முடக்கத்தான் கீரை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நைஜீரியாவில் தோல் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/23/oCx4Cn8YI532A6krYRzM.png)
முதியவர்களுக்கு வயதான காலத்தில் ஏற்படக்கூடிய மூட்டுவலி பிரச்சனைக்கு முடக்கத்தான் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. முடக்கத்தான் கீரை பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வர மூட்டு வலி, உடல் வலி குறையும். முடக்கத்தான் பொடியை முட்டை வெள்ளை கருவில் கலந்து நன்கு பேஸ்ட் போல் குழைத்து அதை வீக்கமுள்ள மூட்டு பகுதியில் தடவ வலி சற்று குறையலாம்.