ARTICLE AD BOX
முருங்கைக் கீரை, ஒரு அற்புதமான ஆரோக்கிய உணவாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் பருப்புடன் சேர்த்து சாதமாகச் செய்தால், அது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ருசியையும் கூட்டும். வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிய முறையில் இந்த ஆரோக்கிய உணவை தயாரிக்கலாம். முருங்கை கீரை, பருப்பு இரண்டுமே சத்தானவை. இவற்றை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். பருப்பு சாதம் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸிற்கு கூட இதை செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை - 1 கப் (நன்கு கழுவி, நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சிகப்பு மிளகாய் - 1
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வேக வைத்த சாதம் - 1 1/2 கப்
இவங்க மிளகு சாப்பிட்டா பிரச்சனை ஆகிடுமாம்...உண்மை தானா?
செய்முறை:
- முதலில் துவரம் பருப்பை நன்கு கழு விட்டு, மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அனைத்தையும் நன்கு வதக்கியதும், முருங்கைக் கீரையை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, சிகப்பு மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
- முருகைக் கீரை வெந்த உடன், வேகவைத்த பருப்பை இதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- பருப்பு, முருங்கைீரை சேர்ந்து நன்கு கிரேவி பதத்திற்கு வந்ததும் இப்போது வேக வைத்த சாதத்தை இதனுடன் கலந்து, மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
இரவில் கொண்டைக்கடலை ஊறவைக்க மறந்துட்டீங்களா? சட்டுன்னு வேக வைக்க ஈஸி வழி இருக்கே
சிறப்பு குறிப்புகள்:
- இந்த உணவு இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்ததால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிக நல்ல ஆரோக்கிய உணவாகும்.
- எண்ணெய் சேர்க்க விருப்பமில்லை என்றால் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்க்கலாம். இதை சுவையாகவும், மனமாகவும் இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- வறுத்த வெந்தயத்தூள் சேர்த்தால் இவை இன்னும் தூக்கலாக இருக்கும்.
இந்த முருங்கை கீரை பருப்பு சாதத்தை சூடாக செய்து அப்பளம், பொரியல், வறுவல், சிப்ஸ் என எதனுடன் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். லஞ்ச் பாக்சிற்கும் சட்டென செய்து கொடுத்து விடலாம்.