ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துதல் தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் இடையே கருத்து முரண் நிலவி வருகிறது. மாநில அரசு இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக தரப்பு, தனது மாநில அளவிலான நிர்வாகிகள் வாயிலாகவும், நேரடியாகவும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக விளக்கம் அளித்து வருகிறது. மாநில அரசு மற்றும் திமுக தரப்பு அதனை ஏற்றுக்கொள்ள மாறுகிறது.
இதையும் படிங்க: #Breaking: What Bro?-வுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அளித்த பதில்.. திமுக அரசுக்கு கண்டனம்.!
தமிழிசை பதில்
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், "தமிழ் வளர்ச்சிக்கு இவர்கள் (திமுகவினர்) என்ன முழு அளவிலான மரியாதை செலுத்தினார்கள்?
இவர்கள் தமிழகத்திற்குள் தமிழை வளர்க்கவில்லை. இருமொழி என ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள். ஆங்கிலத்தை வளத்தால் தமிழ் அழியாதா? தமிழ் பல்கலைக்கழகங்களின் நிலை என்ன?" என பேசினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் இன்று.. பாஜக அண்ணாமலை, தவெக விஜய் வாழ்த்து.. விபரம் உள்ளே.!