IND vs AUS அரையிறுதி மோதல்.., இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு… ரிஷப் பண்டா?? கே.எல். ராகுலா??

6 hours ago
ARTICLE AD BOX

IND vs AUS அரையிறுதி மோதல்.., இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு… ரிஷப் பண்டா?? கே.எல். ராகுலா??

 

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ICC சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. இதன் விளைவாக நாளை (மார்ச் 4) நடைபெற உள்ள அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்திய அணி தற்போது சிறந்த பார்மில் உள்ள நிலையில், ஒரே ஒரு பிரச்சனையாக அணியின் பிளேயிங் லெவன் தேர்வு பார்க்கப்படுகிறது. அதிலும் கே எல் ராகுல் விளையாடுவாரா அல்லது ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்பது தான் கேள்விக்குறி.  லீக் சுற்றில் கே எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்,  இவர் தான் விளையாடிய 3 போட்டிகளிலும்  சிறப்பாக செயல்படவில்லை.

மறுபக்கம் ரிஷப் பண்ட் தற்போது பார்ம் அவுட்டில் உள்ளார். ஆனால் இவர் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து ஜொலித்து வருகிறார். இதனால், நாளைய போட்டியில் இருவரில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற குழப்பம் தற்போது வரை நீடித்து வருகிறது. விக்கெட் கீப்பராக மாற்று வீரர் அணியில் இல்லாததால் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.

follow our Instagram for the latest updates

The post IND vs AUS அரையிறுதி மோதல்.., இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு… ரிஷப் பண்டா?? கே.எல். ராகுலா?? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article