ARTICLE AD BOX
Mumbai Indians Playing 11 Predictions in IPL 2025 : MI பிளேயிங் 11 கணிப்புகள்: ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 23 அன்று சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இதனால் MI அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11 கணிப்புகள்: இந்தியன் பிரீமியர் லீக் அதாவது ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 15 மைதானங்களில் 74 நாட்கள் இந்த ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா நடைபெறுகிறது. இந்த சீசனில் 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் பலம் வாய்ந்த அணியை உருவாக்கியுள்ளது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். MI அணி தனது முதல் போட்டியில் மார்ச் 23 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திர்கொள்கிறது. சிஎஸ்கேயின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குகிறார். முதல் போட்டியில் MI அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், மும்பை அணியின் பிளேயிங் 11 வீரர்கள் எப்படி இருக்கக்கூடும் என்பதைப் பார்ப்போம்.

ஹர்திக் பாண்டியா 2ஆவது முறையாக கேப்டன்
ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2ஆவது சீசனில் விளையாட உள்ளது. இருப்பினும், முதல் போட்டியில் ஹர்திக் களத்தில் இறங்க மாட்டார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2ஆவது போட்டியில் இருந்து பாண்டியா அனைத்து போட்டிகளிலும் கேப்டனாக செயல்படுவார். ஹர்திக் ஒரு சிறந்த தலைவர், அவர் தனது கேப்டன்சியில் குஜராத் அணிக்கு டிராபியை வென்று கொடுத்துள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நல்ல திறமை உடையவர். இதனால் ஹர்திக் அணியை முன்னின்று வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்கை பார்த்தால், ரோகித் சர்மாவுடன் ரியான் ரிகல்டன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு 3-வது இடத்தில் திலக் வர்மா மற்றும் 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடுவார்கள். மிடில் ஆர்டரில் வில் ஜாக்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருப்பார்கள். இவர்கள் ஆட்டத்தை முடிக்கும் பெரிய பொறுப்பை கொண்டிருப்பார்கள். இந்த முறை மிட்செல் சாண்ட்னர் அணியில் உள்ளார், அவரும் பாட்டம் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு:
MI அணியின் பந்துவீச்சைப் பற்றி பேசுகையில், டிரெண்ட் போல்ட் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் புதிய பந்துகளை வீசும் கூட்டணியாக இருப்பார்கள். இருப்பினும், ஜஸ்பிரித் பும்ராவும் இருக்கிறார், ஆனால் காயம் காரணமாக அவர் முதல் பாதியில் சில போட்டிகளில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக ரீஸ் டாப்லி அல்லது அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஹர்திக் பாண்டியாவும் ஆரம்ப ஓவர்களை வீச வாய்ப்புள்ளது. இது தவிர, சுழற்பந்து வீச்சில் மிட்செல் சாண்ட்னர், முஜீப் உர் ரஹ்மான், கரண் சர்மா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11ல் இடம் பெறும் வீரர்கள்
- ரோகித் சர்மா
- ரியான் ரிகல்டன் (விக்கெட் கீப்பர்)
- திலக் வர்மா
- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
- வில் ஜாக்ஸ்
- பெவோன் ஜேக்கப்ஸ்
- நமன திர்
- மிட்செல் சாண்ட்னர்
- ரீஸ் டாப்லி அல்லது ஜோஃப்ரா ஆர்ச்சர்
- முஜிப் உர் ரஹ்மான்
- கரன் சர்மா