ARTICLE AD BOX
நெத்தியை ஆக்டிவ் செய்யும் இந்த நறுமணப் பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார். அது என்ன நறுமணப் பொருள், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
சந்தனத்தின் நன்மைகள் குறித்து எத்னிக் ஹெல்த் கேர் (Ethnic Health Care) யூடிப் சேனலில் டாக்டர் யோக வித்யா பேசியுள்ளார். சந்தனத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று டாக்டர் யோக வித்யா கூறுகையில், “சித்த மருத்துவத்தில் சந்தனம் ரொம்ப அருமையாக இருதயத்தையும் சரி, நரம்பு மண்டலங்களையும் பலப்படுத்தி, உடலில் சூட்டை பராமரிக்கும்போது பித்தம் அதிகமாகி உளவியல் ரீதியான பிரச்னை வராது.
சந்தனத்தை உடலின் மேலேயும் தடவுகிறோம். ஆனால், சந்தனத்தை இழைத்து சுண்டைக்காய் அளவு தினமும் பாலில் குடித்து வந்தால், ரத்தம் சுத்தமாகும், செல்கள் சேதமடையாது, உளவியல் பிரச்னைகள் வராது. ஏனென்றால், பொதுவாக நாம் சந்தனத்தை நெத்தில் அணிவது என்பது அந்த கிளாண்டோட (சுரப்பிகள்) சுரப்புகள், பீனியல் கிளாண்ட், பிட்யூட்டரி எல்லாம் ஆக்டிவாக இருக்கும். அதனால், நாம் சந்தனத்தை ரெகுலரா அப்ளை பண்ணிட்டு வரும்போது நெற்றியை ஆக்டிவேட் பண்ணுகிற மாதிரி அர்த்தம். மேலும், ரேடியேஷன்ஸ் எல்லாம் தாக்காமல் சந்தனம் பாதுகாக்கும். அதனால், சந்தனத்தை உள்ளுக்கும் எடுத்துக்கலாம், உடலின் மேலேயும் தடவலாம்” என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.