ARTICLE AD BOX
முன்னாள் மனைவிக்கு அறுவை சிகிச்சை?.. ஓடோடி சென்று உதவிய ஏ.ஆர்.ரஹ்மான்?.. காதல் இன்னும் குறையல
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார்கள். அவர்களது அந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு பேரும் பிரிந்தாலும் இன்னும் விவாகரத்துக்கு மனுத்தாக்கல் செய்யவில்லை என்றே தெரிகிறது. இதற்கிடையே தன்னுடைய உடல்நல பிரச்னையால்தான் ரஹ்மானை விட்டு பிரிவதாக சாய்ரா அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர்கள் இரண்டு பேர் குறித்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏராளமான தேசிய விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகள் உள்ளிட்டவைகளை வென்றிருக்கிறார். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தற்போதும் பிஸியாக சினிமாக்களுக்கு இசையமைத்துவருகிறார்.கடைசியாக தமிழில் அவர் இசையமைத்த காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்த அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. ரஹ்மானின் இசையும் பெரிதாக கொண்டாடப்பட்டது.

ரஹ்மானின் குடும்பம்: இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் காதல் திருமணம் என்றும் இல்லை குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று இரண்டு தகவல்கள் உண்டு. எப்படியானாலும் இரண்டு பேரும் திருமணத்துக்கு பிறகு காதலோடு வாழ்க்கையை நகர்த்திகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார். அவர்களில் மகனும், ஒரு மகளும் இசை துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.
அதிர்ச்சி தந்த அறிவிப்பு: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், நானும் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சாய்ரா பானுவும் அதனை உறுதி செய்தார். இந்த பிரிவு அறிவிப்புக்கு பிறகு ரஹ்மான் குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவின. முக்கியமாக தன்னிடம் பணியாற்றிய மோனிகா டே என்பவருடன் ரஹ்மானுக்கு ஏற்பட்ட பழக்கம்தான் இந்த பிரிவுக்கு காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டன. ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்து; ரஹ்மான் தனக்கு தந்தை போன்றவர் என்று கூறியிருந்தார்.
இப்போலாம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல.. வேற சொல்லுது.. சிம்பு செம ஜாலி பேச்சு
மறுத்த சாய்ரா பானு: இருப்பினும் அந்தக் கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. இதனால் பொறுத்திருந்த சாய்ரா பானுவும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், 'எனக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாகத்தான் ரஹ்மானை விட்டு பிரிகிறேன். சிலர் சொல்வது போல் இல்லை. ரஹ்மான் போன்ற ஒரு நல்ல மனிதரை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது' என்று கூறி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் இவர்கள் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
Michelle Trachtenberg: 39 வயது ஹாலிவுட் வில்லி நடிகை மரணம்.. கொலையா என சந்தேகிக்கும் காவல்துறை!
பயில்வானின் பேச்சு: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், "தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ரஹ்மானிடமிருந்து பிரிவதாக சாய்ரா பானு அறிவித்திருந்தார். இரண்டு பேரும் பிரிந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் இருக்கும் அன்பும், மரியாதையும் குறையவில்லை. சமீபத்தில்கூட சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சாய்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தெரிந்துகொண்ட ரஹ்மான் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு சென்று தனது முன்னாள் மனைவிக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்துவிட்டு வந்தார்" என்றார்.