முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை முறியடித்த ஜோப்ரா ஆர்ச்சர் – விவரம் இதோ

21 hours ago
ARTICLE AD BOX

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியானது நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான அணியும் பலப்பரீட்சை நடத்தின. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை முறியடித்த ஜோப்ரா ஆர்ச்சர் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் இப்ராஹிம் ஜாத்ரான் 177 ரன்களையும், அஸ்மதுல்லா ஓமர்சாய் 41 ரன்களையும் எடுத்தனர். இதன் காரணமாக 326 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் பிரமாண்ட இலக்கை நோக்கி துரத்திய இங்கிலாந்து அணியானது ஆப்கானிஸ்தான அணியை சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்கள் குவித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அஸ்மத்துல்லா ஓமர்சாய் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 10 ஓவர்கள் வீசி 64 ரன்களை விட்டுக் கொடுத்து ம3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சனின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.

அந்த வகையில் நேற்று ஆர்ச்சர் எடுத்த 3 விக்கெட் மூலம் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சார்பாக குறைந்த போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்வசம் வைத்திருந்தார்.

இதையும் படிங்க : இனியாச்சும் அந்த சாக்கு சொல்லாம.. இந்திய துணைக் கண்டத்துக்கு மதிப்பு கொடுங்க.. இங்கிலாந்தை சாடிய சாஸ்திரி

ஆண்டர்சன் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த போது 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் தற்போது அதனை ஜோப்ரா ஆர்ச்சர் 30-வது போட்டியிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரது சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை முறியடித்த ஜோப்ரா ஆர்ச்சர் – விவரம் இதோ appeared first on Cric Tamil.

Read Entire Article