முத்துசாமிக்கு முக்கியத்துவம் குறைகிறதா? - ஈரோடு திமுகவில் ‘இடப்பெயர்ச்சி’ அரசியல்!

8 hours ago
ARTICLE AD BOX

Published : 20 Mar 2025 07:51 AM
Last Updated : 20 Mar 2025 07:51 AM

முத்துசாமிக்கு முக்கியத்துவம் குறைகிறதா? - ஈரோடு திமுகவில் ‘இடப்பெயர்ச்சி’ அரசியல்!

அமைச்சர் முத்துசாமி, என்.கே.கே.பி.​ராஜா, பிரகாஷ் , தோப்பு வெங்​க​டாசலம், வி.சி.சந்​திரகு​மார்
<?php // } ?>

திமுக-வில் மாவட்ட வாரியாக உதயநிதி ஆதரவாளர்களின் கை மெல்ல மெல்ல ஓங்கி வருவதால் சீனியர்கள் எல்லாம் ஜெர்க் ஆகி வருகிறார்கள். அந்த வகையில், ஈரோடு மாவட்ட திமுக-வின் அதிகார மையாக இருந்து வரும் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களையும் இந்த அச்சம் சூழ்ந்துள்ளது.

ஈரோடு முத்து​சாமிக்கு 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்​களில் போட்டியிட திமுக வாய்ப்​பளித்தது. இருமுறையும் தோற்றுப்போன முத்து​சாமி, 2021 தேர்தலில், விட்ட இடத்தைப் பிடித்து அமைச்​சர​வை​யிலும் அங்கமா​னார். அதன் பிறகு திமுக-வில் முத்து​சாமிக்கு தரப்பட்ட முக்கி​யத்து​வ​மானது பலரது கண்களை உறுத்​தியது.

அதேசமயம், தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தனக்கு யாரெல்லாம் சவாலாக இருப்​பார்களோ அவர்களை எல்லாம் முத்துசாமி மெல்ல ஓரங்கட்​டிய​தாகச் சொல்வார்கள். ஒன்றுபட்ட ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.கே.கே.பி.​ராஜவின் பதவி பறிக்​கப்​பட்டு, ஈரோடு வடக்கு, தெற்கு என மாவட்ட திமுக இரண்டாக பிரிக்​கப்​பட்டது. தெற்கு மாவட்​டத்​துக்கு செயலாளர் ஆனார் முத்து​சாமி.

முத்து​சாமிக்கு போட்டியாக இருந்த சுப்பு​லட்சுமி ஜெகதீசன் 2021-ல் அறிமுகமே இல்லாத பாஜக வேட்பாளர் சரஸ்வ​தி​யிடம் சொற்ப ஓட்டில் தோற்றதும் இயல்பாக நடந்தது இல்லை என்பார்கள். அந்தத் தேர்தலில் மாவட்​டத்தில் 2 இடங்களில் மட்டுமே திமுக வென்ற​தால், போட்டி​யின்றி அமைச்​சரு​மானார் முத்து​சாமி. மக்களவைத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை கூட்ட​ணிக்கு தள்ளிவிட ஒரு முயற்சி நடந்தது.

ஆனால் சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை, தொகுதியை திமுக-வுக்கு ஒதுக்கி இளைஞரணி துணை அமைப்​பாளரான பிரகாஷை எம்.பி ஆக்கியது கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு திமுக-வில் தனிக்​காட்டு ராஜாவாக கோலோச்சிய முத்து​சாமிக்கு, பிரகாஷின் வரவு அத்தனை விருப்​ப​மானதாக இல்லை. அதேசமயம் உதயநி​தியின் நேரடி தேர்வு, அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்​ட​வர்​களின் அன்புக்​குரியவர் என்பதால் பிரகாஷ் பிரகாசிக்க ஆரம்பித்​துள்ளார்.

ஈவிகேஎஸ் மறைவுக்குப் பின், ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசிடம் கேட்டுப்​பெற்ற திமுக தலைமை, தேமுதிக வரவான வி.சி.சந்​திரகுமாரை வேட்பாள​ராக்கி வெற்றி பெற வைத்துள்ளது. தொண்டர்​களிடம் நெருக்கம் பாராட்டுபவர் என்பதால் சந்திரகு​மாரின் ‘என்ட்ரி’ முத்து​சாமிக்கு சங்கடத்தை உண்டாக்​கலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள். அதேசமயம்

முத்து​சாமியின் அரவணைப்பில் வளர்வதையே சந்திரகுமார் விரும்​புவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்​றனர். இந்த நிலையில், முத்து​சாமியின் தெற்கு மாவட்​டத்தில் இருந்து பெருந்துறை தொகுதி​யை​யும், வடக்கு மாவட்​டத்தில் இருந்து பவானி தொகுதி​யையும் பிரித்து ஈரோடு மத்திய மாவட்​டத்தை உருவாக்கி​யுள்ள திமுக தலைமை, அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்க​டாசலத்தைச் செயலாளராக அறிவித்​துள்ளது.

ஏற்கெனவே, செங்கோட்​டையனை எதிர்த்து அரசியல் செய்த தோப்பு வெங்க​டாசலத்தின் வரவும், முத்து​சாமிக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்றே பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலையில், ஒதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் ‘ஆக்டீவ்’ அரசியலுக்கு வருகிறார், அந்தியூர் தொகுதியில் போட்டியிட தயாராகிறார் என்ற தகவலும் ஈரோடு திமுக வட்டாரத்தை தற்போது பரபரப்​பாக்கி உள்ளது.

இதுகுறித்து முத்து​சாமியின் ஆதரவாளர்​களிடம் பேசிய​போது, “எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் அமைச்சர் செய்ய​மாட்டார். எதையுமே விதிகளுக்கு உட்பட்டே செய்ய வேண்டும் என்று நினைப்​பவர். இது கட்சி​யினர் சிலருக்கு பிடிப்​ப​தில்லை. அதனால் ஏதேதோ கட்டுக்​கதைகளை அள்ளி​விடு​கிறார்கள். ஆனால், அமைச்​சரின் அரசியல் அனுபவத்தை​யும், செயல்​பாடு​களையும் தலைவர் நான்கு உணர்ந்​திருக்​கிறார். அதனால் இந்த சலசலப்பு​களால் சலனப்​ப​டாமல் இருக்​கிறார் அமைச்சர்” என்றனர். முற்பகல் செய்யின் பிற்​பகல் விளையும் என்பது அரசியலுக்கு மட்​டும் பொருந்​தாதா என்​ன!

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article