Bank Strike | வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. வேலை நிறுத்த போராட்டம்! 4 நாட்கள் பேங்க் செயல்படாது!

11 hours ago
ARTICLE AD BOX

Banks Strike Latest News: நாடு தழுவி அளவில் பேங்க் ஸ்ட்ரைக் நடைபெற இருக்கிறது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி பணிகள் வரும் சனிக்கிழமை முதலே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் வரும் சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை என்பதால், வங்கிகளுக்கு பொதுவாக விடுமுறை ஆகும். எனவே சனிக்கிழமை வங்கிகள் செயல்படாது. ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைக்கும் வங்கிகள் செயல்படாது. 

திங்கட்கிழமை (மார்ச் 24) மற்றும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) இந்த இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். இதிலே வங்கி ஊதியர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள், இயக்குனர் உட்பட அனைத்து பணியிடங்களை சேர்ந்தோரும் பங்கேற்கப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

அதாவது கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். குறிப்பாக தனியார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, தனியார் வங்கிகளும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். வெளிநாட்டு வங்கிகள் இங்கு செயல்படுகிறதால், வெளிநாட்டு வங்கி ஊழியர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களுடன் ஊடக வங்கி ஊழியர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய அளவுக்கான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. 

அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தக் காரணம் என்ன என்றால், மக்கள் சேவையை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள் இயக்குனர் உட்பட அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரப்பினால் தான் மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடியும். அதேபோன்று வாரத்தில் ஐந்து நாட்கள் வேலையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணித்திரனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடித்திருக்கிறது. 

இந்த பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்திய வங்கிகள் சங்கம் ஐக்கிய கூட்டமைப்பு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆனால் இருவருக்கும் இடியாயே இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அதாவது வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எவற்றையும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக ஐக்கிய கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்டது. 

எனவே திட்டமிட்டபடி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றால் மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும். 

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதில் பெரிய சிக்கல் இருக்காது. ஆனால் நான்கு தினங்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் போதிய அளவு பணம் இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். 

இதில் மிக முக்கியமாக வங்கி பண பரிமாற்றம் உட்பட அனைத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது சாதாரண வேலை நிறுத்தம் அல்ல. அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தம் என்பதால் மிகப்பெரிய அளவுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனால் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறாமல் இருப்பதற்காக சமரச பேச்சிற்காக டெல்லியில் உள்ள தொழிலாளர் ஆணயம் அழைப்பு விடுத்திருக்கிறது. போராட்ட குழுவினருக்கு நாளை டெல்லியிலே பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது. எனவே வெள்ளிக்கிழமை நடைபெறுகின்ற பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படாவிட்டால் ஸ்ட்ரைக் நிச்சயமாக நடைபெறும் என கூறியிருக்கிறார்கள். 

ஸ்ட்ரைக் என்பது இரண்டு தினங்கள் தான். ஆனால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை மற்றும் திங்கள், செவ்வாய் ஸ்ட்ரைக் என்பதால் நான்கு தினங்களுக்கு பெரிய அளவில் வங்கி சேவை பாதிக்கப்படும். 

பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டுவிட்டால் பிரச்சனை இருக்காது. வங்கிகள் வழக்கம் போல செயல்படும். ஒருவேளை சமரசம் ஏற்படாமல் ஸ்ட்ரைக் என்ற அறிவிப்பு உறுதியானால் வங்கி சேவைகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம். எனவே வங்கி சேவையை பயன்படுத்துவோர் உடனடியாக தங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு கொள்ளுங்கள். 

மேலும் படிக்க - வங்கிகளில் நகை அடகு வைக்க புதிய கட்டுப்பாடு! விதிகள் மாற்றத்தால் மக்கள் அவதி!

மேலும் படிக்க - ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு! உயர்கிறது கட்டணங்கள்!

மேலும் படிக்க - சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா! வருமான வரி நோட்டீஸ் வரலாம்? எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read Entire Article