ARTICLE AD BOX

முத்து,மீனா செய்த விஷயத்தை பார்த்து பரசு வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடிக்கவில்லை என நிரூபிக்க அந்த இரண்டு குடிகாரர்களை கண்டுபிடித்து மீனா மற்றும் ரவியிடம் நடந்த விஷயத்தை பற்றி கேட்க அவர்கள் இருவரும் முத்து குடிக்கவில்லை என்பதையும் மேலே சரக்கு கொட்டிடுச்சு என்ற உண்மையையும் சொல்ல முத்து அவர்களை அனுப்பிவிட்டு இப்பவாச்சும் நம்பரையா என்று கோபப்படுகிறார்.சாரிங்க தெரியாம பேசிட்டேன் என்று சொல்ல உடனே ரவியிடம் உன்கிட்ட என்னைக்காவது நான் பொய் சொல்லி இருக்கேனடா என்று சொல்ல மீனா அவங்க சொன்னாங்க உடனே வந்து நான் கேட்டுட்டேன் என்று சொல்ல யார் என்று கேட்கிறார்.
உங்க அண்ணன் தான் நீங்க குடிச்சிருக்கிறதா உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி இருக்காரு அவரு வந்து என்கிட்ட சொன்னதுனால தான் உங்க மேல நான் கோபப்பட்டு திட்டிட்டேன் மன்னிச்சிடுங்க என்று சொல்ல அந்த ஓடு காலியா எல்லாத்துக்கும் காரணம் அவன் தானா எங்க இருக்கான் என்று தேடிக் கொண்டு வர மறுபக்கம் மனோஜ் ரோகினியுடன் ரொமான்ஸ் செய்து போட்டோ எடுத்து கொண்டு இருக்க போனை புடுங்கி கொண்டு நான் குடிச்சத நீ பார்த்தியா எதுக்கு அம்மாகிட்ட அப்படி சொன்னேன் என்று கேட்க நீ கையில பாட்டில் வச்சிருந்த அதனாலதான் நான் அப்படி சொன்னேன் என்று சொன்னா அப்ப கையில வச்சிருந்தாலே குடிச்சேன் அர்த்தமா என்று போனை வாங்கிக் கொண்டு ஓடுகிறார் பின்னாலையே மனோஜ் துரத்திக் கொண்டு ஓடுகிற கொஞ்சம் நேரம் ஆட்டம் காட்டிவிட்டு போனை கொடுக்காமல் இருக்க மீனா போனை புடுங்கி ரோகினி கையில் கொடுக்கிறார் பிறகு அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.
பிறகு ஒரு கணவன் மனைவி மண்டபத்திற்குள் வர அவர்கள் நகை திருடர்கள் என தெரிய வருகிறது. அவர்கள் சேரில் உட்கார்ந்து போறதுக்குள்ள எவ்வளவு நகையை எடுக்க முடியுமோ எடுத்துட்டு போயிடனும் நம்மள பாத்து யாருக்குனா சந்தேகம் வந்ததுன்னா உடனே கிளம்பிடலாம் என்று திட்டம் போட்டு இருவரும் பிரிந்து நகையை திருட செல்கின்றனர். மறுபக்கம் பரசு மீனாவிடம் முகூர்த்தத்துக்கு நேராயிடுச்சு பொண்ணு கூட்டிட்டு வாம்மா என்று சொல்ல, முத்து அண்ணாமலை பக்கத்தில் சார் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க மீனாவை திட்டினியா என்று கேட்கிறார் இல்லப்பா முன்னாடி எல்லாம் நான் குடிச்சிட்டே வந்தாலும் எனக்கு கண்டுபிடிக்க மாட்டா ஆனால் நான் குடிக்கல என்ன திட்டிட்டா என்று சொல்ல ஏற்கனவே ஒரு தடவை தப்பு பண்ணும் போது அந்த மாதிரி கேள்விப்பட்டால் அவங்கள சொல்லத்தான் தோணும் விடு என்று சொல்ல, முத்து இது மாதிரி ஒரு பொண்டாட்டி கட்டிகிட்டு நீங்க ஏன் பையனோ குடிக்காம இருக்கீங்க என்று கேட்டுவிட்டு ஓடிவிடுகிறார்.
மறுபக்கம் மீனா பவானியை அழைத்து வர ரூமுக்கு செல்ல அங்கு இந்த திருட்டுப் பெண் வந்து சொந்தக்காரர்கள் போல் சகஜமாக பேசுகிறார். அனைவரும் கிளம்பி வெளியே வரும்போது நீங்க போங்க நான் கதவு பூட்டிட்டு வரேன் என்று சொல்லி கதவு கிட்ட வரும்போது கையில் இருக்கும் கத்தரிக்கோல் கீழே மீனாவுக்கு சந்தேகம் வருகிறது நீங்க யாரு உங்களுக்கு என்ன சொந்தம் என்று கேட்க நம் மாப்பிள்ளையோட அக்கா நாத்தனார் என்று சொல்லி சமாளிக்கிறார். உடனே அந்தத் திருட்டுப் பெண் என்னையே சந்தேகமா பாக்குறீங்களா என்று கோபப்பட மீனா அமைதியாக சென்று விடுகிறார் கொஞ்ச நேரத்தில் முத்துவிடம் சென்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்று சொல்ல நான் இன்னும் குடிச்சு இருக்கேனா இல்லையா என்ற சந்தேகமா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லங்க ஒரு பொம்பளைய பாத்த ஆனா அவங்க அக்காவோட நாத்தனார்ன்னு சொன்னாங்க கையில கத்திரிக்கோல் வச்சிருந்தாங்க என்று சொல்ல மாப்பிள்ளைக்கு தான் அக்காவே கிடையாது என்று சொல்ல ஆமால நிறைய யோசிக்கவே இல்ல அதுவும் இல்லாம ஏதாவது சின்னதா பிரச்சினை பண்ணி கல்யாணத்தை நிறுத்திடுவாங்களோ பயமா இருந்தது அதனாலதான் நான் எதுவும் சொல்லாம வந்துட்டேன் என்று சொல்ல சரி நீ போய் ஒரு பக்கம் பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பிறகு முகூர்த்தம் முடிந்தவுடன் ஒரு ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் கிளம்ப அண்ணாமலை நானும் கிளம்புகிறோம் என்று இவர்கள் நால்வரும் கிளம்பி விடுகின்றனர்.முத்து,மீனா மண்டபத்தில் இருந்து அந்த லேடியை தேடி பார்க்க மீனா பேக்குடன் வெளியில் போவதை பார்த்து விடுகிறார்.
மீனா என்ன செய்கிறார்? அவர்களிடம் நகையை காப்பாற்றினார்களா? இல்லையா? என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post முத்து, மீனா செய்த விஷயம்.. பரசு சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.