ரிலீசுக்கு முன்பே ஸ்கெட்ச் போடும் விக்ரம்.. ஜெட் வேகத்தில் ஏறிய சீயானின் சம்பளம்

15 hours ago
ARTICLE AD BOX

Vikram: விக்ரமுக்கு தங்கலான் ரிலீசுக்கு முன்பு, பின்பு என அவரது சினிமா கேரியரை பிரித்துக் கொள்ளலாம். ஏனென்றால் தங்கலானுக்கு முன்பு ஒரு ஐந்தாறு வருடங்கள் விக்ரமின் படங்கள் எதுவுமே சரிவர போகவில்லை.

இதனால் அவரது மார்க்கெட் புயல் வேகத்தில் சரிந்தது. அதன் பிறகு பா ரஞ்சித் தான் விக்ரமுக்கு கை கொடுத்தார். இவர்களது கூட்டணியில் உருவான தங்கலான் படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது.

அதிலும் குறிப்பாக விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தங்கலான் படத்திற்கு 25 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார் விக்ரம். அதன் பிறகு அருண்குமார் மற்றும் விக்ரம் நடிப்பில் வீரதீர சூரன் படம் உருவாகி உள்ளது.

டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய விக்ரம்

இந்த படம் வருகின்ற மார்ச் 27 வெளியாக உள்ள நிலையில் இதில் விக்ரமின் சம்பளம் 30 கோடியாகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இப்போது தயாரிப்பாளர்களிடம் தனது சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி கேட்கிறாராம்.

ஒரு படத்திற்கு 50 கோடி சம்பளம் வேண்டும் என்று விக்ரம் கேட்கிறார். பெரிய நடிகர்கள் 100, 200 கோடி சம்பளம் வாங்கி நடிக்கிறார்கள். அவர்களுடைய படத்தில் பாதி காட்சிகளில் டூப்பு தான் நடிக்கின்றனர்.

ஆனால் விக்ரம் சினிமாவில் அன்பு கொண்ட உசுரை கொடுத்து நடிக்க கூடியவர். அவருக்கு 50 கோடி சம்பளம் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.

வீரதீர சூரன் படத்தை தொடர்ந்து மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். மேலும் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வரிசை கட்டி நிற்கிறது.

Read Entire Article